பொங்கலுக்கு ரூ.3000 + மகளிர் உரிமை தொகை ரூ.1000! வீடு வீடாக கதவை தட்ட போகும் அதிகாரிகள்! ஸ்டாலின் பிளான்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சர்வே ஒன்றை நிர்வாகிகள் மூலம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் டாப் தலைகள் சிலர் நிதித்துறை தரப்பிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் தமிழக சட்டசபை தேர்தல் வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு
தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், மாநிலத்தின் நிதி நிலை காரணமாக அதிகாரிகள் சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ஒரு பெரிய கவலையாக உள்ளது. மேலும், அரசு ஏற்கனவே பல நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. அதோடு மகளிர் உரிமைத்தொகையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. நிதி நெருக்கடி காரணமாக 5 ஆயிரத்திற்கு பதிலாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதால் , ஸ்டாலின் அதை ஏற்றுக்கொண்டு 3 ஆயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை
ஏற்கனவே மகளிர் உரிமை தொகைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் நவம்பர் 12ம் தேதியில் இருந்து மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், டிசம்பர் 13 முதல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000 கிடைக்கும். இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்கனவே மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களைச் சென்றடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், ஆரம்பக் கட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறிய அல்லது காலக்கெடுவை இழந்த அதிகமான பெண்களைச் சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஸ்டாலின் எடுக்கும் சர்வே
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சர்வே ஒன்றை நிர்வாகிகள் மூலம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்று, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தினருடனும் பேச உள்ளது. பல முக்கியமான கேள்விகளை கேட்க உள்ளனர். பொங்கல் பரிசு வந்ததா, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவி தங்கள் வீட்டைச் சென்றடைந்ததா என விசாரித்து, ஒரு படிவத்தை வழங்கி விவரங்களை பெறுவார்கள்.
படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்படும். அதில் கோரிக்கையின் நிலையை அறிய முடியும். அவர்களுக்கு இருக்கும் கோரிக்கைகளை கேட்டு, அதன் அடிப்படையில் உடனடி தீர்வு அல்லது தேர்தல் வாக்குறுதிகளாக திமுகவினர் இதை வழங்குவார்கள் என்று ஆளும் திமுக தரப்பு கூறி உள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications