ஈரோடு கிழக்கில் 1000 ஓட்டு கூட வாங்க முடியாத ஓபிஎஸ்.. வாக்கு வங்கி இல்லாத பாஜக.. பொங்கலூர் மணிகண்டன்
1000 ஓட்டுகள் கூட வாங்க முடியாத ஓபிஎஸ் எங்களுடன் சேர வாக்கு வங்கியே இல்லாத பாஜக சொல்வதை கேட்க முடியுமா- பொங்கலூர் மணிகண்டன்
சென்னை: 1000 ஓட்டுகள் கூட தேறாத ஓபிஎஸ் எங்களுடன் சேர வேண்டும் என்பதற்காக வாக்கு வங்கி இல்லாத பாஜக சொன்னதை எல்லாம் கேட்க வேண்டுமா என பொங்கலூர் மணிகண்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடையீட்டு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியையும் ஓபிஎஸ்ஸையும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் சி.டி. ரவி கூறுகையில் 1972 ஆம் ஆண்டு அதிமுக உருவான போது எம்ஜிஆர் திமுகவை தீயசக்தி என அழைத்தார். அவரது கருத்து 2023 ஆம் ஆண்டும் மாறவில்லை. தான் உயிருடன் இருந்த வரை அம்மாவும் திமுகவை தீயசக்தி என அழைத்தார்.

முதல்வர் ஸ்டாலின்
மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் அரசின் பிரபலம் குறைந்துவரும் நேரத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப் பெரிய அளவில் உள்ளது. திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி திமுக.

மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வு. சொத்து வரி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, திமுக அமைச்சர்கள், எம்பிக்களால் மூத்த தலைவர்களால் தமிழ் கலாச்சாரம் மீது தொடர் தாக்குதல் நடைபெறுகிறது. எனவே இந்த தீய சக்தியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க ஒன்றுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றுபட்ட அதிமுக கட்டாயம் தேவை என்றார்.

இரு அணிகள்
இந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றியணைய வேண்டும் என சி.டி.ரவியின் கருத்துக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் சிங்கை ராமசந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் வெளியிட்ட ட்வீட்டில் எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என சொல்வதற்கு சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாமா? இதே போல் கர்நாடகா பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என நாங்கள் கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா, திமுகவை எதிர்த்து ஒரு தேர்தல்லி கூட வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவதா என கேள்வி எழுப்பியிருந்தார்.

2 வாரங்கள்
இதற்கு பாஜகவின் கிஷோர் கே சாமி பதில் அளிக்கையில் எதனால் 2 வாரங்கள் அதே 2017 ம் ஆண்டு ஆளுநர் ஏன் ஓடி ஒளிந்தார் என்பதை விளக்கினால் நலம் . எங்க எம் எல் ஏ கள் இதே சென்னைக்கு வெளியே கூவத்தூரில் தான் இருந்தார்கள் ஆளுநர் தான் மாநிலத்தை விட்டே ஓடினார் என கேள்வி எழுப்பியிருந்தார். கிஷோர் கே சாமியின் ட்வீட்டிற்கு கோவை சத்யன் பதிலளிக்கையில் டெல்லி வழிகாட்டுதல் எனும் பிம்பத்தை தோற்றுவித்தது யார்? இன்றும் பாஜக வேட்பாளர் நிறுத்தினால் எனது வேட்பாளர் வாபஸ் என்று அறிவித்தது யார்? பிரதமர் சொல்லி இணைந்தேன் என்றவர் யார்? பாஜகவின் பகடை அஇஅதிமுக இல்லை. உண்மை உணர்க, தெளிவு பெருக என தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் மோதல்
இந்த நிலையில் ட்விட்டரில் அதிமுக- பாஜக இடையே முற்றல் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட்டு பெரிய பிரச்சினையை உண்டு செய்வதாக திமுக கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுமாறு அண்ணாமலை கூறியதை அடுத்து அவரும் வாபஸ் பெற்றார். இந்த நிலையில் தொலைகாட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பொங்கலூர் மணிகண்டன் கூறுகையில், சிங்கை ராமசந்திரனும் கோவை சத்யனும் தொண்டர்களுடைய எண்ணத்தை பிரதிபலிக்கிற வகையில் கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அதிமுக மீது பாஜக உண்மையிலேயே பாசம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுகிறது. கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவை ஆதரிப்பதாக சொல்லிவிட்டது.

பாஜக அமைதி
அப்போதெல்லாம் பாஜக அமைதியாக இருந்தது. தற்போது அதிமுகவைத்தான் ஆதரிக்கிறோம் என சொல்வதற்கே பாஜக தயங்குகிறது. மன ஒற்றுமை இருந்தால் மட்டுமே சேர்ந்து செயலாற்ற முடியும். ஓபிஎஸ் செயல்பாடுகள் எல்லாம் எப்படி இருந்தது. கட்சி அலுவலகத்தை உடைத்தார், கட்சிக்கு எதிராக வாக்களித்தார், சசிகலாவுக்கு ஆதரவாகவும் செயல்பட பன்னீர் செல்வம் தொடங்கிவிட்டார். இவரை நம்பி அதிமுக எப்படி இயங்கும். துணிவு இருந்தால் ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் 1000 வாக்குகள் வாங்குறதே அதியசம்தான். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை சேர்க்கலாமா வேண்டாமா என்கிற முடிவு எடுப்பது அதிமுக, அதிமுக பொதுக் குழு, அதிமுக தலைமை. ஆனால் வெளியிலிருந்து பாஜக கருத்துகளை சொன்னால் எப்படி ஏற்க முடியும்.

40 ஆண்டு அரசியல்
அப்படியென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தெரியாதா. 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்து வரும் எடப்பாடிக்கு வெளியே இருந்து யாரெல்லாமோ அறிவுரை சொல்கிறார்கள். அதை ஏற்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை.
உண்மையை சொல்ல போனால் பன்னீர் செல்வம் பாவம். அவரை பகடைக்காயாக்கி திமுக விளையாட நினைத்தது. அதிமுக இரு அணிகளும் அடித்துக் கொள்ளும், அதை டிவியில் ஒளிபரப்புவார்கள். அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாமல் போகும். அதைவைத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வென்றுவிடலாம் என கணக்கு போட்டியிருநத நிலையில் அந்த கணக்கிற்கு நீதிமன்றம் ஆப்பு வைத்துவிட்டது. இதை ஓபிஎஸ் உணராமல் திமுகவுடன் சேர்ந்து கொண்டு செயல்படுகிறார் என பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்தார்.
-
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
ஆஞ்சியோ டெஸ்ட் டாக்டர் ராமதாசுக்கு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார்? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
வாரிசுகளின் போட்டியால் பரபரக்கும் பென்னாகரம்.. ராமதாஸ் மகன் Vs ஜி.கே. மணி மகன்? - யார் பலம்? -
தைலாபுரம் இல்லத்திற்குச் சென்ற அன்புமணி.. ராமதாஸ் உடனான மோதலுக்கு பிறகு திடீர் விசிட்! பின்னணி என்ன? -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா












Click it and Unblock the Notifications