ஹலோ மிஸ்டர்.. நீங்க தேசிய கட்சியின் தலைவர் வேற! அண்ணாமலைக்கு கிளாஸ் எடுத்த பூவுலகின் நண்பர்கள்
சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், காற்று மாசு என்பதை கணக்கில் கொள்ளாமல் நிறைய பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு 'பூவுலகின் நண்பர்கள்' குழு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு எந்த அளவுக்கு ஏற்படுகிறது என்பது குறித்து அக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

ஒன்னும் ஆகாது
தீபாவளி பண்டிகை களைக்கட்டியுள்ள நிலையில், நேற்று (அக்.22) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "சிவகாசியில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே இந்த முறை நிறைய பட்டாசு வாங்கி வெடியுங்கள். தீபாவளி ஒரு நாள்தான் எனவே அன்று பசுமை பட்டாசுகள் கூட அதிகமாக வெடியுங்கள். குழந்தைகளுக்கும் நிறைய பட்டாசு வாங்கி கொடுங்கள். பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம். காற்று மாசையெல்லாம் ஒரு நாள் பார்க்காதீர்கள். ஒருநாள் வெடிப்பதால் ஒன்னும் ஆகாது." என்று கூறியிருந்தார்.

பாதிப்பு
இதற்கு 'பூவுலகின் நண்பர்கள்' குழு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் ராஜன் கூறுகையில், "நிறைய பட்டாசு வெடிங்க, ஒரு நாள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாது என்கிறார் அண்ணாமலை. இவர் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், முன்னாள் இகாப அதிகாரி, கொடுமை. தீபாவளிக்கு பிறகு என்றாவது ஒரு நாள் வடசென்னை அல்லது ஏன் டில்லியில் கூட ஒரு மருத்துவமனைக்கு போய் பார்த்தால் தெரியும் பட்டாசு மாசால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று.

உயிரிழப்பு
மிஸ்டர், உலகம் முழுவதும் காற்று மாசால் 1 கோடி பேர் இறக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போடும் வட இந்தியர்களின் வாழ்வு காலம் 7.5 ஆண்டுகள் காற்று மாசால் குறைவதாகவும், தென் இந்தியர்கள் 2.5 ஆண்டுகளை இழப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசிற்கு பட்டாசு மட்டுமே காரணம் என சொல்லவில்லை, ஆனால் பட்டாசும் ஒரு காரணம். அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும் எப்போதாவது படித்துப்பாருங்கள், எப்போதுமே மதம், மதம் என்று யோசித்துக்கொண்டிருந்தால் "மதம்" பிடித்துவிடும். இவ்வளவிற்கும் உங்கள் கட்சியின் அரசுதான் பட்டாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது." என்று கூறியுள்ளார்.

சிறை தண்டனை
நாள் முழுவதும் வெளியேற்றப்படும் வாகன புகை, தொழிற்சாலை புகை என இருக்கும் போது ஒரு நாள் வெடிக்கும் பட்டாசு காரணமாகதான் மாசு ஏற்படுகிறதா? என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் இந்தாண்டுடன் சேர்ந்து மூன்று ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications