சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த 1 வார்த்தை.. எடப்பாடியே எதிர்பார்க்கல.. பாக்யராஜ் "மனசு கரையுதா".. எகிறியடிக்க ரெடியான ஓபிஎஸ்

டைரக்டர் பாக்யராஜை வேட்பாளராக நிறுத்த ஓபிஎஸ் டீம் தொடர்ந்து முயன்று வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற குழப்பம் ஓபிஎஸ் டீமில் அதிகரித்து வரும்நிலையில், பாக்யராஜ் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.. இதையடுத்து பாக்யராஜ் என்ன முடிவெடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு கொங்கு ஈரோட்டில் வலம்வருகிறது.

ஓபிஸ்ஸை பொறுத்தவரை, நடக்க போகும் இடைத்தேர்தலில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமலேயே இருந்தார்.. ஆனால், தற்போது வேறு வழியில்லாமல் போட்டியிட நேர்ந்துள்ளது. ஆனால், கொங்கு பகுதியில் ஓபிஎஸ்ஸுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை.

இதனால் 2 விதமான குழப்பங்களுக்கு ஆளாகி உள்ளார்.. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 12 சதவீதம் மட்டுமே இந்த தொகுதியில் செல்வாக்கு பெற்றுள்ளார்..

எம்.எல்.ஏக்கள் சொந்த ஊருக்கு போனா மக்கள் சும்மா விடமாட்டாங்க... நடிகர் பாக்கியராஜ் எச்சரிக்கைஎம்.எல்.ஏக்கள் சொந்த ஊருக்கு போனா மக்கள் சும்மா விடமாட்டாங்க... நடிகர் பாக்கியராஜ் எச்சரிக்கை

 பாக்கியராஜ்ஜா

பாக்கியராஜ்ஜா

அதனால், கொங்கு அல்லாத பிற சமூகத்தினரின் வாக்குகளை பெற்றால், வெற்றியை சுபலமாக்கிவிடலாம் என்றும், அதற்காக கொங்கு அல்லாத ஒருநபரை வேட்பாளராக களமிறக்கலாம் என்றும் யோசனை உள்ளது.. அதாவது, முதலியார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்தினால், ஈரோடு கிழக்கில், கொங்கு அல்லாத வாக்குகளை சுலபமாக பெற்றுவிடலாம் என்பதே அந்த யோசனையாக உள்ளது.. மற்றொருபுறம், பிரதான வாக்குகள் நிறைந்த கொங்கு சமுதாய வாக்குகளையே அறுவடை செய்யலாம்.. அதுதான் இப்போதைக்கு சேஃப் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நினைக்கிறார்களாம்..

 கிரேஸ் + ஸ்டார்

கிரேஸ் + ஸ்டார்

"95 சதவீதம் கட்சி எங்களிடம் தான் இருக்கிறது" என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி தரப்பே இன்னமும் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் குழம்பி கிடக்கும்போது, ஓபிஎஸ்சுக்கும் இதே சிக்கல்தான் நீடித்து வருகிறது.. இப்போது வரை தகுதியான வலிமையான வேட்பாளர் யாரும் கிடைக்கவில்லையாம்.. ஒவ்வொருவருக்கும், ஃபோன் போட்டு, "போட்டியிடுங்கள்" என சொல்லி வந்தாலும், யாரும் அதற்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 2 நாட்களாகவே பாக்யராஜ் பெயர் அடிபட்டு வருகிறது.. ஓபிஎஸ் ஆதரவாளர் என்றாலும், பாக்யராஜை வேட்பாளராக தேர்ந்தெடுக்க சில காரணங்களும் சொல்லப்படுகிறது..

 பாக்யராஜ் நச்

பாக்யராஜ் நச்

எப்படியும் எடப்பாடி பழனிசாமி, வலுவுள்ள ஒரு வேட்பாளரைதான் களமிறக்குவார்.. அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில், ஓபிஎஸ்ஸும் நிறுத்தியாக வேண்டும். அதுவும், கொங்குவில் ஓபிஎஸ் சார்பில் யார் நிறுத்தப்பட்டாலும், புது சின்னத்தில்தான் நிற்க வேண்டி வரும்.. அப்படியே புது சின்னத்தில் நின்றாலும், மக்கள் ஆதரவை ஓரளவு பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதனால்தான், கிரேஸ் + ஸ்டார் வேட்பாளராக பாக்யராஜை இறக்கலாமா என்ற யோசனை உள்ளதாக சொல்கிறார்கள். ஆனாலும், பாக்யராஜ், இன்னும் ஓகே சொல்லவில்லையாம்.. இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் பாக்கியராஜ் இல்லையாம்..

 மனசு கரையுமா?

மனசு கரையுமா?

அதுமட்டுமல்ல, வலுவான வேட்பாளரான இளங்கோவனை எதிர்த்து தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் பாக்யராஜ் தரப்பில் சொல்லப்பட்டதாக தெரிகிறது. அதேசமயத்தில் அதிமுகவின் அனைத்து தலைவர்களும் ஒன்றுபட்டு நின்றால் தேர்தலில் களம் இறங்க தயார் என்றும் கறாராக சொல்லியதாகவும் கூறப்படுகிறது... எனினும், செலவை நாங்களே பார்த்துக்கறோம் என்று சொல்லி, அவரை சம்மதிக்க வைக்க ஓபிஎஸ் தரப்பில் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றன.. பாக்யராஜ் சம்மதிக்காவிட்டாலும், மூத்த தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

 ஹீரோ வேட்பாளர்

ஹீரோ வேட்பாளர்

அதேசமயம், போட்டியிட திட்டவட்டமாக மறுத்தாலும், வேறு ஒருவரை தேர்வு செய்ய ஓபிஎஸ் டீம் தயாராகி வருகிறது.. ஒன்றுபட்ட அதிமுகவைதான் பாஜகவும் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.. நடக்க போகும் இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை தரப்போவதாக பாஜகவும் அறிவிக்க உள்ளதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. அதேபோலதான், பாக்யராஜும் ஒருங்கிணைந்த அதிமுக என்றால், தேர்தலில் போட்டியிட தயார் என்று வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது..

 கரையுதா மனசு

கரையுதா மனசு

சில மாதங்களுக்கு முன்பு, ஓபிஎஸ்ஸுக்கு திடீரென ஆதரவு தந்தபோதே, பாக்யராஜ் ஒரு விஷயத்தை செய்தியாளர்களிடம் சொல்லியிருந்தார்.. "முடிந்தால் எடப்பாடியை நேரில் சந்தித்து அனைவரும் இணைவதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பேன்" என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கான முயற்சிகளை பாக்யராஜ் எடுத்தாரா என்பது தெரியவில்லை என்றாலும், ஒருங்கிணைந்த அதிமுகவையே பாக்யராஜ் விரும்புகிறார் என்பதை ஓரளவு அறிய முடிந்தது.. இப்போதும் அதே முடிவில் அவர் இருப்பதாகவும் தெரிகிறது.. எனினும், பாக்யராஜின் "மனசை கரைக்க" ஓபிஎஸ் டீம் விடாமல் முயன்று வருகிறார்களாம்..!!

English summary
Popular Director Bhagyaraj to contest in the Erode East by election and Who is the candidate for OPS team
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X