Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்
Weekly Rasi Palan: ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.
அந்த வகையில், ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு உடனிருப்பவர்கள் உங்களை கோபப்படுத்தும் சூழல் உள்ளது. அதனை கண்டுகொள்ளாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யும் வகையில் உங்களுக்கு ஏற்றவாறு செயல்படுவது நன்மையைத் தரும்.
சிக்கல் தீரும்
இழுபறியாக இருந்த நிலைமைகள், சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். புதிய தொழில்கள் கிடைக்கும். கடல் கடந்து தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டாகும். நிறைய பணங்களைத் தயாராகிக் கொள்வது நல்லது. இளைஞர்களுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உள்ளது. புதுப்புது விஷயங்கள், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
திடீர் பணவரவு
உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொடர்ந்து இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். சுபிக்ஷம், அனுகூலம், யோகம் உண்டாகும் அற்புதமான காலகட்டம். மனதில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும் நல்ல காலகட்டம். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் சந்தோஷம் ஏற்படும். திடீர் பணவரவு, திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் அமைப்பு உள்ளது.
வழிபாடு
பெரிய மனிதர்களை சந்திக்கும் யோகம் உண்டு. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது, தியானம், யோகம் செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வீர்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். துர்க்கை வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications