பிரதமர் மோடி வருகை: சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை - போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் செல்லும் பகுதியில் டிரோன் கேமராவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக சென்னை வர உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்தாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று ஒத்திகை நடைபெறுகிறது. பிரதமர் செல்லும் பாதையில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பிரதமர் நரேந்திரமோடி நாளை ஞாயிறுக்கிழமை ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில், சென்னை தீவுத்திடல் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வரும் மோடிக்கு வழி நெடுக பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் பிற்பகல் 1.30 மணி அளவில் தனி விமானம் மூலம் கேரளா செல்கிறார்.
மூன்று மணி நேரமே மட்டுமே சென்னையில் இருக்கும் பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திரமோடி விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் வந்து இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகவும், நேரு உள் விளையாட்டு அரங்கம் வருவதற்கு மாற்று ஏற்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. அந்த சாலை பகுதிகளிலும் வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
இன்று முதலே அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்லும் சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர மகேஷ்குமார்அகர்வால், பிரதமரை வரவேற்க ஒரு லட்சம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்படுகிறார்கள். பிரதமர் பயணிக்க உள்ள பகுதியில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்படும். பிரதமரின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் பகுதியில் டிரோன் கேமராவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு படை காவலர்கள் வியாழக்கிழமை முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விட்டனர். மத்திய-மாநில உளவுப்பிரிவு இப்போதிருந்தே, கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications