சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலப்புத் திருமணம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை - வெளியானது அரசாணை

வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் நடைமுறை 51 ஆண்டுகளுக்குப் பின்னர் சீரமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த உத்தரவின்படி, 1970 முதல் நடைமுறையில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த வகையில் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் நடைமுறை 51 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகள்

ஆதரவற்ற குழந்தைகள்

வேலை வாய்ப்புகளில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும். தனியார் அல்லது அரசால் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி பயின்று வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரர்கள், அந்த இல்லங்களில் இருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையில் பணியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சேர முடியாத கிராமப்புற தாய், தந்தையற்ற நபர்கள், வருவாய் வட்டாட்சியர் மூலம் பெறப்படும் சான்றிதழ் அடிப்படையிலும், முன்னுரிமை பெற தகுதி உடையவர்கள் என தமிழக அரசு கூறியுள்ளது.

முதல்தலைமுறை பட்டதாரிகள்

முதல்தலைமுறை பட்டதாரிகள்

இதற்கு அடுத்தபடியாக முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு 2வது மற்றும் 3 வது முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

கலப்பு திருமண வாரிசுகள்

கலப்பு திருமண வாரிசுகள்

இதன் பின்பு போரில் உடல் தகுதி இழந்த முன்னாள் ராணுவத்தினர், வீரமரணம் அடைந்த ராணுவத்தினரின் வாரிசுகள், ஆதரவற்ற விதவைகள் , கலப்பு திருமண வாரிசுகள் உள்ளிட்ட வழக்கமான வரிசைப்படி வேலைவாய்ப்பு முன்னுரிமை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசு வேலைகளில் முன்னுரிமை அல்லாத பிரிவினருக்கு 1:4 என்ற வரிசையில் முன்னுரிமை இருக்கும்.

English summary
The Tamil Nadu government has announced that heirs of love marriages will be given priority in government employment. The government has also announced that young people who have lost their parents due to the corona epidemic will be given first priority in employment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X