சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் மழை உண்டு.. 18-ஆம் தேதிக்கு பிறகு வங்கக் கடலில் மீண்டும் புயல்- தனியார் வானிலை ஆய்வாளர்

Google Oneindia Tamil News

Recommended Video

    18-ஆம் தேதிக்கு பிறகு வங்கக் கடலில் மீண்டும் புயல்| கடும் வெயிலால் முதியவர் மயங்கி உயிரிழப்பு-வீடியோ

    சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 18-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கத்தரி வெயில் கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கோடை மழை அடுத்த சில நாட்களும் தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழை.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழை.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!

    18-ஆம் தேதி நல்ல மழை

    18-ஆம் தேதி நல்ல மழை

    இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் எஸ் ராமசந்திரன் கூறுகையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. படிப்படியாக மழை பெய்ய ஆரம்பித்து 18-ஆம் தேதி நல்ல மழை பெய்யும்.

    வெயிலின் தாக்கம்

    வெயிலின் தாக்கம்

    அதே வேளையில் பகல் நேரங்களில் அனல் காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும். சென்னையில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    வங்கக் கடல்

    வங்கக் கடல்

    சென்னையில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு. வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மிதமான மழையை எதிர்பார்க்கலாம். வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வங்கக் கடலில் புயல் உருவாகவுள்ளது.

    தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு

    இந்த புயல் மீண்டும் ஒடிஸா, வங்கதேசம் இடையே கரையை கடக்கும். இந்த புயல் ஆரம்ப நாட்களில் தமிழகத்துக்கு மழையை கொடுக்க வாய்ப்புண்டு என தெரிவித்துள்ளார்.

    English summary
    Private Weather Forecast says that Tamilnadu will get raifall upto May 18. One more cyclone will be formed in Bay of Bengal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X