1000 கோடி உருட்டு..பெரிய ஹீரோக்களுக்கு முரட்டுத் தனமாய் முட்டுக் கொடுக்கும் தனஞ்செயன்! விளாசிய மாறன்
சென்னை: சமீபத்தில் இளம் இயக்குனர் ஒருவர் தன்னை ஒரு பெரிய ஹீரோ அவமானப்படுத்தி விட்டதாக பேசியது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. யார் அந்த ஹீரோ? என்ற விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் அந்த இயக்குனருக்கு அறிவுரை சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன். இதற்கிடையே தனஞ்செயன் பெரிய ஹீரோக்களுக்கு முட்டுக் கொடுப்பது ஏன் என விமர்சித்துள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன்.
தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களின் ஒருவர் தனஞ்செயன். தற்போது யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஜனநாயகன் படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என பேசி இருந்தார். மேலும் அடுத்த கமல்ஹாசன், சிம்பு எனவும் கூறியிருந்தார்.
இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ஒருவர் தன்னை ஒரு ஹீரோ அவமானப்படுத்தியதாக பேசி இருந்தார். இதை அடுத்து யார் அந்த ஹீரோ?

இதை அடுத்து அந்த இயக்குனருக்கு அறிவுரை கூறிய தயாரிப்பாளர் தனஞ்செயன் தற்போது பெரிய ஹீரோக்கள் குறித்து பேசினால் 'பேக் ஃபயர்' ஆகும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் பெரிய ஹீரோக்களுக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு இளம் இயக்குனரை மிரட்டுவதா என கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு சொம்படித்து சிறிய இயக்குனர் மற்றும் சிறிய தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை சொல்லிஅறுக்கும் தனஞ்செயன். புதிய இயக்குனரை பெரிய ஹீரோ ஒருவர் அவமானப்படுத்திய செய்திக்கு பலரும் அந்த இயக்குனரின் பக்கம் நின்றார்கள். ஆனால் தனஞ்செயன் போட்டுள்ள ட்வீட் என்ன தெரியுமா? "ஜெயிக்கறது முன்னாடி ரொம்ப பேசாதே. Backfire ஆகும் ... ஜெயிச்ச பிறகு பேசவே பேசாதே ...வெற்றியை பத்தி உலகமே பேசும். அது போதும்." அறிமுக இயக்குனருக்கு ஒரு படத்தை எடுத்து முடிப்பதே வெற்றிதான். அவர் எதை எப்போது பேச வேண்டுமென அறிவரை சொல்ல நீங்கள் யார்?
கோடம்பாக்கத்தின் அனைத்து பஞ்சாயத்திலும் வலியோரின் பக்கமே நிற்பது ஏன்? கங்குவா ஜெயிப்பதற்கு முன்பே மேடையில் ஓவர் பில்டப் செய்தார்களே.. அப்போது இந்த அறிவுரையை சொல்ல வாய் வரவில்லையா? ஜெயித்த பிறகு பேச வேண்டிய வசூல் கணக்கை.. ரிலீஸ்க்கு முன்பே கூலி 1000 கோடி அடிக்குமா, ஜனநாயகன் 1000 கோடி அடிக்குமா என நீங்கள் மட்டும் கூவுவது நியாயமா? ஓரிரு முறை கூவினால் கூட பரவாயில்லை. இதுவரை இதே 1000 கோடி தலைப்புகளில் 100 பேட்டிகள் தந்துள்ளீர்கள்.
இந்த படங்கள் 1000 கோடி அடிக்குமோ இல்லையோ.. இதுபோன்ற பேட்டிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடப்பது உறுதி. முன்னணி ஹீரோக்களின் வெறிபிடித்த ரசிகன் கூட இத்தனை முறை கூவ மாட்டான். வாரத்திற்கு ஏழெட்டு சிறிய படங்கள் வந்தால் நஷ்டம்தான் வரும். ஏன் இப்படி செய்கிறீர்கள் என சிறு தயாரிப்பாளை கேட்கிறீர்களே.. முந்தைய வாரமும், அடுத்த வாரமும் பெரிய படங்கள் வந்து அனைத்து ஸ்க்ரீன்களையும் பிடித்துக்கொண்டால்..சிறு படங்கள் என்ன செய்ய இயலும்? தனால்தானே கிடைக்கிற கேப்பில் ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது?
பெரிய படங்கள் அளவான ஸ்க்ரீன்களில் வந்தால் போதும் என அந்ந தயாரிப்பாளர்களிடம் கூறுவதை விட்டு விட்டு.. சிறுபட தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை சொல்லி அறுப்பது என்ன வகையான நாட்டாமைத்தனம்? நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளோரின் பெரிய படங்களை அளவான ஸ்க்ரீன் எண்ணிக்கையில் வெளியிட சொல்லி தீர்மானம் போடுவீர்களா? அப்படியே போட்டாலும் அந்த தீர்மானத்தை நீங்களே மதிப்பீர்களா?
அடுத்து வரும் தக் ஃலைப், கூலி பட தயாரிப்பாளர்களிடம் அளவான ஸ்க்ரீன்களில் திரையிடுங்கள் என சொன்னால் உங்கள் பேச்சை கேட்பார்களா? மொத்த தியேட்டர்களிலும் ரிலீஸாகி 1000 கோடி வசூலிப்பதில் என்ன பெருமை வெங்காயம் வேண்டி இருக்கிறது? மெய்யழகன், ரெட்ரோவை லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற சிறு படங்கள் வீழ்த்தியது நினைவிருக்கட்டும். இனியேனும் உங்கள் பொன்னான அறிவுரைகளை பெரிய ஸ்டார்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறி அவர்களை திருத்த பாடம் எடுங்கள்." என கூறியுள்ளார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications