Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1000 சவரன் நகையை விடுங்க.. மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த ‘பிரம்மாண்ட’ பரிசு! நினைச்சு பாக்கவே முடியாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரவாரமாக நடந்து முடிந்தாலும் திரை உலகில் இன்னும் பேசு பொருளாகவே இருக்கிறது தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனருமான ஐசரி கணேஷ் இல்ல திருமண விழா. இந்த நிலையில் மகளுக்கு ஐசரி கணேஷ் தற்போது கொடுத்துள்ள பரிசு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் பெரும் செல்வந்தர்கள் தொழிலதிபர்கள் சினிமாவுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல தொழில் அதிபர்கள் சினிமாத் துறைக்கு வந்திருக்கின்றனர். எஸ்.ஆர்.எம் யூனிவர்சிட்டி கூட வேந்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தது.

அப்படி திரையுலகுக்கு வந்தவர் தான் ஐசரி கணேஷ். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான இவர் ஏற்கனவே, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். தற்போது மூக்குத்தி அம்மன் 2, விஜே சித்துவின் டாயங்கரம் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார்.

Ishari Ganesh ECR cinema

இதற்கிடையே சமீபத்தில் ஐசரி கணேஷின் மகள் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திலும் திருமணத்திற்கு பின் நடைபெற்ற வரவேற்பிலும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, பிரபு, விக்ரம் பிரபு, சத்யராஜ், இயக்குனர்கள் மணிரத்தினம், ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அது மட்டும் அல்லாமல் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்புக்கு மட்டும் 25,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டது. மேலும் ஆயிரம் சவரன் தங்க நகை, 5000 கோடி ரூபாய் பணம் உள்ளிட்டவையும் சீர்வரிசையாக வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் திரைப்படத்திற்கு செய்யப்படுவது போலவே திருமண வரவேற்புக்கும் பிரம்மாண்ட செட் போடப்பட்டது.

தொடர்ந்து மாலத்தீவில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடத்த இருப்பதாகவும், 2000க்கும் மேற்பட்ட விவிஐபிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணம் முடிவடைந்தாலும் ஐசரி கணேஷ் இல்ல விழா குறித்து தான் தற்போதும் பேச்சு திரை உலகில் அடிபடுகிறது.

அதாவது கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ஐசரி கணேஷ் தற்போது மகளுக்கும் மருமகனுக்கும் திருமண பரிசு கொடுத்திருக்கிறார். அதுவும் பிரம்மாண்டமாக சென்னை ஈசிஆர்-ல் மிகப்பெரிய அளவில் பீச் ஹவுஸ் ஒன்றை கட்டி மகளின் திருமணத்திற்கு பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாடியில் நீச்சல் குளம், பிரம்மாண்ட தோட்டம், பூங்கா, மினி தியேட்டர் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் அந்த பீச் ஹவுஸின் மதிப்பு மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. விரைவில் அந்த வீட்டில் மகளை குடி வைக்கவும் ஐசரி கணேஷ் திட்டமிட்டுள்ளதாக சினிமா உலகில் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+