புழல் சிறை டூ ஸ்டான்லி.. பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு தெரியுமா?
சென்னை: யூடியூப்பில் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அருகே உள்ள வேங்கைவாசலைச் சேர்ந்தவர் மதன் (29). இவர் இரு யூ-டியூப் சேனல்களை நடத்தி வந்தாா்.
தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி விளையாடுவது என்பது குறித்தான ஆலோசனைகளை வழங்கி வந்தாா். எனவே பப்ஜி மதன் என்று பட்டப் பெயர் கிடைத்தது.

பப்ஜி மதன்
இதன்பிறகு, ஃபாலோவர்களை அதிகரித்து, சம்பாதிக்க திட்டமிட்டு, ஆபாச பேச்சுக்களை ஆரம்பித்தார். தன்னோடு விளையாடும் சக பெண்களிடம் கொச்சையாகவும், பாலியல் ரீதியாகவும் பேசி வந்தார் பப்ஜி மதன். அவரின் இந்த பேச்சை ரசித்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்தனர்.

ஆபாச பேச்சுக்கள்
இந்த நிலையில் வடபழனியைச் சோ்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் இந்த ஆபாச பேச்சுக்கள் குறித்து புகார் அளித்தார். சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 159 க்கும் மேற்பட்ட புகார்கள் பப்ஜி மதனுக்கு எதிராக குவிந்தன. எனவே, 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் பப்ஜி மதனை தேடி வந்தனர்.

தனிப்படை கைது
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த யூ- டியூபர் மதனை தருமபுரியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். யூடியூப்பில் அவர் இப்படி பேசி பதிவிட்டு மாதம் 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தவர் என்ற விவரம் அப்போது தெரிய வந்தது. ஆடி கார், பங்களா வீடு என பல இவருக்கு சொந்தமாக இருந்தது. விசாரணைக்கு பின்னா் அவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 6ம் தேதி கைது செய்யப்பட்டாா். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதி பகுதியில் பப்ஜி மதன் அடைக்கப்பட்டிருந்தார்.
Recommended Video

ஸ்டான்லி மருத்துவமனை
இந்த நிலையில், பப்ஜி மதனுக்கு கடந்த சில வாரங்களாக முதுகு வலி ஏற்பட்டது. சிறையிலுள்ள மருத்துவமனையில் பப்ஜி மதன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி அதிகமானதால், பப்ஜி மதன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications