காயிதேமில்லத் பிறந்தநாள்! பாரம்பரிய வழக்கத்தை கைவிடாத ஸ்டாலின்! மலர் போர்வை அணிவித்து மரியாதை!
சென்னை: கண்ணியத் தென்றல் என்றழைக்கப்படும் காயிதேமில்லத்தின் 127-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அன்பை பெற்றவராக திகழ்ந்த காயிதே மில்லத், திமுகவின் ஆரம்பக்காலங்களில் கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் பக்கபலமாக துணை நின்றவர்.
கருணாநிதி உடல் நலிவுற்று வீட்டில் ஓய்வெடுத்ததற்கு முன்பு வரை, ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி காயிதேமில்லத் நினைவிடம் சென்று அவருக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

காயிதேமில்லத்
கண்ணியமிகு காயிதேமில்லத்தின் 127-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், மலர்களால் தயாரிக்கப்பட்டிருந்த போர்வையை நினைவிடத்தில் போர்த்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு து ஆ முடியும் வரை முதல்வர் அங்கேயே இருந்தார்.

அதிமுக மரியாதை
காயிதேமில்லத் நினைவிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்து சென்ற சிறிது நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு ஆஜராகி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி ஆகியோர் உடன் வந்திருந்ததுடன் முன் ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் ஏனோ மிஸ்ஸிங்.

திருமா மரியாதை
திமுக, அதிமுகவை தொடர்ந்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், என வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் காயிதேமில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்த வகையில் அங்கு சென்ற விசிக தலைவர் திருமா, காயிதே மில்லத் பிறந்தநாளான ஜூன் 5-ஆம் தேதியை சமூக நல்லிக்கணக்க நாள் என அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

புதிய பல்கலைக்கழகம்
மேலும், தமிழகத்தில் காயிதேமில்லத் பெயரில் புதிய பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைமை பொறுப்பில் இருந்த காயிதேமில்லத், கேரளாவின் மஞ்சேரி தொகுதியில் பிரசாரத்துக்கு செல்லாமலேயே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர். நெல்லை மாவட்டத்தில் பிறந்த காயிதேமில்லத்தின் இயற்பெயர் முகமது இஸ்மாயில் ஆகும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications