சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாசிட்டிவான எந்த கேஸ்களிலும் அறிகுறி இல்லை.. அது பாசிட்டிவ் செய்தி.. ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா உறுதியான எந்த கேஸ்களிலும் அறிகுறி இல்லை என்பதே ஒரு நேர்மறையான செய்திதான் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடுகளில் கடைகளை அடைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில் ராயபுரம், ஐஸ்ஹவுஸ், கோடம்பாக்கம் உள்ளிட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நாங்கள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். கோயம்பேட்டில் 3590 கடைகள் இயங்கி வருகின்றன.

வடசென்னையில் இரவு நேரத்தில் அதிர்ச்சி.. வீட்டு வாசல் முன்பு ரூபாய் நோட்டுகள்.. கொரோனா பரப்ப சதி? வடசென்னையில் இரவு நேரத்தில் அதிர்ச்சி.. வீட்டு வாசல் முன்பு ரூபாய் நோட்டுகள்.. கொரோனா பரப்ப சதி?

சோதனை

சோதனை

இங்கு மொத்த வியாபாரிகளின் கடைகள் 200 கடைகளும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் 300 கடைகளும் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகள் மூடப்பட்டுவிட்டது. அந்த கடைகளில் பணியாற்றிய நபர்களுக்கு கொரோனா சோதனை செய்துள்ளோம்.

வீட்டுக் காவல்

வீட்டுக் காவல்

கோயம்பேடுடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் கொரோனா சோதனை செய்துவிட்டோம். இது போல் ஃபோகஸ்ட் டெஸ்டிங் செய்யும் போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். அது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள் இங்கே தங்கியிருந்தால் அவர்களை வீட்டு காவலில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம்.

அறிகுறிகள் இல்லை

அறிகுறிகள் இல்லை

அது போல் கடைகள் மூடப்பட்டுவிட்டதால் சொந்த மாவட்டங்களுக்கு செல்வோருக்கும் மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு தனிமைப்படுத்தியுள்ளோம். உங்களுக்கு ஒரு பாசிட்டிவ் செய்தி சொல்லபோகிறேன். இப்போது கொரோனா உறுதியான நபர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக அறிகுறிகள் இல்லை.

எண்ணிக்கை

எண்ணிக்கை

அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதியாவது பாசிட்டிவான செய்தி. நோய் உள்ளது என அவங்களாக சொல்லாமல் நாமாக தேடி சென்று கண்டுபிடிக்கிறோம். ஜெனரலைஸ்டு டெஸ்டிங் இல்லாமல் ஃபோகஸ்டாக டெஸ்டிங் செய்வதால் எண்ணிக்கை அதிகரிக்கும். சென்னையில் இன்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

சமூக இடைவெளி

சமூக இடைவெளி

இதனால் யாரும் பயப்பட வேண்டாம். அதே நேரத்தில் கவனக்குறைவாகவும் மக்கள் இருக்கக் கூடாது. காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வந்தால் கைகளை கழுவ வேண்டும். காய்கறி கடைகளுக்கு செல்லும் போது முகக் கவசம் போட வேண்டும். காய்கறிகளையும் கழுவி வைக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

தனித்தனி வியூகம்

தனித்தனி வியூகம்

இந்த மூன்றைத்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அது போல் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் எந்த நபருக்காவது கொரோனா பாசிட்டிவ் என வந்தால் நாம் வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெளியே செல்லக் கூடாது. மார்க்கெட் பகுதிகள், ஸ்லம் பகுதிகள் என தனித்தனியாக வியூகங்களை வகுத்துள்ளோம். அறிகுறி இல்லாதவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்காமல் கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் இருக்கும் சூழல் இல்லாத நிலை உருவாகும் என்பதால் இந்த திட்டம். இதற்காக நந்தம்பாக்கம், டிஜி வைஷ்ணவா கல்லூரி ஆகியன கோவிட் கேர் சென்டர்களாக உள்ளன.

கொரோனா

கொரோனா

தேவையில்லாமல் மக்கள் வெளியே செல்ல வேண்டாம். கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து சோதனை நடைபெறுவதால் எண்ணிக்கை கூடும். சரியான சிகிச்சை மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும். கபசுர குடிநீர் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.

English summary
Covid Nodal Special Officer J.Radhakrishnan says that positive news is, there is no symptoms for covid 19 patients because of focused testing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X