சென்னையை குளிர்வித்த மழை... சட்டென்று மாறிய வானிலை - 2 மணிநேரத்திற்கு நீடிக்குமாம்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் பெய்யும் மழையால் அலுவலகம் செல்பவர்களும் , வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் பல ஊர்களில் அதிகாலை மழை பெய்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. நள்ளிரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ந்த காற்று வீசியது. சட்டென்று மாறிய வானிலையால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர் என்றாலும் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்பவர்ககளும் பள்ளிக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. நள்ளிரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ந்த காற்று வீசியது. சட்டென்று மாறிய வானிலையால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர் என்றாலும் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்பவர்களும் பள்ளிக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திண்டுக்கல் தேனி தென்காசி மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்த நிலையில் டெல்டா மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயமுத்தூர், நீலகிரி ,ஈரோடு, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நள்ளிரவு நேரத்தில் மழை பெய்தது. அதிகாலை முதல் கிண்டி, சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, எழுப்பூர், சென்ட்ரல், பிராட்வே உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
மயிலாப்பூர் ,திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேப்பாக்கம் ,திருவான்மியூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், அலுவலகம் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சற்று சிரமத்தை சந்தித்து வந்துள்ளனர். மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.
அதேபோல் விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், நீலகிரி கோவை ,கள்ளக்குறிச்சி ,தேனி ,திண்டுக்கல், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சில நாட்களாக வெயிலடித்த நிலையில் அதிகாலை முதல் பெய்து வரும் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications