நீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்! ரசிகர்கள் நெகிழ்ச்சி
சென்னை: தன்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு நாளில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் ரஜினி காந்த் முதல் முதலாக அபூர்வ ராகங்கள் படத்தில் 1975ம் ஆண்டு நடித்தார். கே பாலசந்தர் இயக்கிய இந்த படத்தில் நடித்த பின்னர் Anthuleni Katha என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன்பிறகு மூன்று முடிச்சு படத்தில் நடித்தார். இந்த மூன்றுமே பாலசந்தர் இயக்கியவை ஆகும். 1977ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் வில்லனாக நடித்தார்.

அதன்பிறகு முதல்முதலாக 1978ம் ஆண்டு பைரவி படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துவிட்டார். தமிழகத்தின் வசூல் மன்னாகவும், திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆகவும் உயர்ந்தார். கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெற்றார்.
ரஜினி சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதையொட்டி அவரது ரசிகர்கள், திரையுலகினர் என பல ஆயிரம் பேர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு நாளில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கம் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் 'நீங்கள் இல்லாமல் நான் இல்லை' என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி" என்று கூறியுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications