சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை எனக்கு.. நடக்க போகும் இரண்டு முக்கியமான விஷயங்கள்.. ரஜினி பரபரப்பு அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய திரையுலகில் வியத்தகு சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசால் தரப்படும் மிக உயரிய விருது தாதா சாஹேப் பால்கே விருது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

இந்த விருது அண்மைக்காலத்தில் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழி திரையுலகிலும் சிறந்தவர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளது- தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் தான் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.

Exclusive: ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி.. இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டது அவருக்கே தெரியாது -கதிர் Exclusive: ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி.. இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டது அவருக்கே தெரியாது -கதிர்

மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு அறிவிப்பு

இந்நிலையில் 2019-ம் ஆண்டிற்கான தாதா சாஹேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் திரையுலகினர் பலர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பியதால் டெல்லியில் நாளை (அக்டோபர் 25) நடைபெறும் விழாவில் ரஜினிக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லிக்கு ரஜினிகாந்த் செல்கிறார்.

வருத்தமாக உள்ளது

வருத்தமாக உள்ளது

இந்த விருது தொடர்பாக தனது வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசுகையில், "தாதா சாஹேப் பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. இந்த விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மக்களின் அன்பு

மக்களின் அன்பு

இதனிடையே ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.

HOOTE APP

HOOTE APP

இரண்டாவது, என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய "HOOTE"என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் "HOOTE APP மூலமாக பதிவிடலாம்... இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான "HOOTE APP ஈ. ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்" இவ்வாறு கூறினார்.

அசுரன் படம்

அசுரன் படம்

இதனிடையே 25ம் தேதியான நாளை நடைபெறும் விழாவில் 2019-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளும் வழங்கப்பட உள்ளது . இதில் 'அசுரன்' படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ் தேர்வாகி உள்ளார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகர் வழங்கப்பட உள்ளது.

டி இமான்

டி இமான்

பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விரு வழங்கப்பட உள்ளது. 'கேடி (எ) கருப்புதுரை' படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது தரப்பட உள்ளது. இசையமைப்பாளர் டி.இமானுக்கு, 'விஸ்வாசம்' படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது ஆகியவையும் வழங்கப்பட உள்ளது

English summary
Actor Rajinikanth has released a sensational statement that I have two important events to take place tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X