முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 22 ஆம் தேதி, வெளியிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதை அறிவித்தது படக்குழு. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் பிசியாக இருக்கும் ரஜினிகாந்த் அவ்வப்போது முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி வருகிறார்.

ரஜினிகாந்த் சந்திப்பு
சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அரசியல் குறித்து பேசியதாகவும் அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள ஆன்மீக உணர்வு ஆளுநருக்கு பிடித்துள்ளது என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா என்று கேட்டதற்கு இப்போதைக்கு சொல்ல முடியாது என்று கூறினார்.

சபரீசன் உடன் ரஜினி சந்திப்பு
மறுபடியும் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை என்றார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்துள்ளார் ரஜினிகாந்த். கறுப்பு கலர் உடை அணிந்த ரஜினிகாந்த் சபரீசனின் தோள் மீது கை போட்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அரசியல் பேசினார்களா?
அரசியலில் வெளிப்படையாக ஈடுபடாவிட்டாலும் அரசியல் பேசி வருபவர் ரஜினிகாந்த். அதே போல சபரீசனும் அரசியலில் வெளிப்படையாக செயல்படாவிட்டாலும் முதல்வர் மு.க ஸ்டாலின் குடும்பத்தினர், அவரது உறவினர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம் நட்பு பாராட்டி வருகிறார்.

சந்திப்பிற்கான காரணம்
இந்த நிலையில் ரஜினிகாந்துடன் சபரீசன் சந்தித்து பேசியது சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இரு தரப்பிலும் எப்போது சந்தித்தார்கள் என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. சமூக வலைத்தளங்களின் மூலம் இந்த போட்டோ பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications