சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீன் சட்டியில் சர்க்கரை பொங்கல்.. விஜய் பாணியில் குட்டி கதை கூறிய ரஜினிகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: மீன் சட்டியில் சர்க்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்கும் என ரஜினிகாந்த், விஜய் பாணியில் ஒரு குட்டிக் கதையை சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

Recommended Video

    Rajinikanth press meet| Full Speech|ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு... முழு வீடியோ

    மாவட்டச் செயலாளர்களுடன் போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த் நேராக சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு சென்றார்.

    அங்கு அவர் நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டு #RajinikanthPoliticalEntry என்ற ஹேஷ்டேக் டிரென்டானது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்.

    இது ராஜதந்திரம்.. ஆனால் ரசிகர்கள் ஏற்கவில்லை.. 'சின்ன' மனவருத்தத்தை போட்டு உடைத்த ரஜினிகாந்த்!இது ராஜதந்திரம்.. ஆனால் ரசிகர்கள் ஏற்கவில்லை.. 'சின்ன' மனவருத்தத்தை போட்டு உடைத்த ரஜினிகாந்த்!

    சரியாக இருக்காது

    சரியாக இருக்காது

    அப்போது அவர் கூறுகையில் 1996-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது. சிஸ்டம் சரிசெய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் நன்றாக இருக்காது. தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது என்பதை நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். சிஸ்டத்தை சரிப்படுத்தாமல் நான் அரசியலுக்கு வந்தால் அது சரியாக இருக்காது.

    குட்டிக் கதை

    குட்டிக் கதை

    இது எப்படி இருக்கும் தெரியுமா. மீன் சட்டியை கழுவாமல் அதில் சர்க்கரை பொங்கல் செய்தால் எப்படி கெட்டுவிடுமோ அது போல்தான் இருக்கும். எனவே சிஸ்டத்தை அரசியல் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என குட்டிக் கதை மூலம் விளக்கினார் ரஜினிகாந்த். இது விஜய் கூறும் குட்டிக் கதை பாணியில் உள்ளது.

    விஜய் கூறிய கதை

    விஜய் கூறிய கதை

    நடிகர் விஜய் ஒரு விழாவில் பேசிய போது அவர் கூறுகையில் பூக்கடைக்காரரை கூட்டிக் கொண்டு போய் பட்டாசு கடையில் வேலைக்கு அமர்த்தினால் என்னவாகும். பூக்களுக்கு அவ்வப்போது தண்ணீர் தெளிப்பது போல் பட்டாசுகளுக்கும் தண்ணீர் தெளிப்பார். இறுதியில் அது வெடிக்காமலேயே செல்லும் என விஜய் கூறியதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

    பதவிகள் நீக்கம்

    பதவிகள் நீக்கம்

    விஜயை போல் ரஜினியும் ஒரு குட்டிக் கதை கூறியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அது போல் இன்னொரு கதையையும் கூறினார். ஒரு திருமண வீட்டில் நிறைய வேலைக்காரர்கள், சமையல்காரர்கள் உள்ளிட்டோர் பணியாற்றுவர். திருமணம் முடிந்தவுடனும் இத்தனை வேலைக்காரர்கள் தேவையா?. அவர்களை அனுப்பிவிடுவர். அது போல் எனவே தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சிப் பதவிகள் இருக்கும். தேர்தலுக்கு பின்னர் முக்கிய பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பதவிகள் நீக்கப்படும்.

    English summary
    Rajinikanth says Kutty Story like Actor Vijay says in song release function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X