• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தூத்துக்குடி... சென்னையில் அன்று பேசிய பேச்சு.. ரஜினிக்கு குறி வைக்கும் விசாரணை ஆணையம்!

Google Oneindia Tamil News
  தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி-வீடியோ

  சென்னை: வாயை வெச்சிக்கிட்டு சும்மா இருந்தால்தானே.. எதையாவது ஒன்றை பேசி சர்ச்சையில் சிக்கி கொள்ளும், நடிகர் ரஜினிகாந்த் இப்போது விசாரணை வளையத்துக்குள் வரும் படியான நிலைமை வந்துவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில், ரஜினியிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மனித உயிர்கள் மீது துப்பாக்கி சூடும், தடியடியும் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். உயிரிழந்த நபரின் குடும்பமும், படுகாயமடைந்த நபரின் குடும்பமும் இன்று வரை நிமிர முடியாமல் நிர்க்கதியாக தவித்து வருகின்றனர்.

  இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசானது, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதன்படி விசாரணையும் 13 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 366 பேரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  கவிழ்ந்து கிடக்கும் நிர்வாகிகள்... களையெடுக்கும் உதயநிதி.. கைவிரித்த ஸ்டாலின்..!கவிழ்ந்து கிடக்கும் நிர்வாகிகள்... களையெடுக்கும் உதயநிதி.. கைவிரித்த ஸ்டாலின்..!

  வாக்குமூலம்

  வாக்குமூலம்

  இந்த நிலையில் 14-வது கட்ட விசாரணை நடத்த 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 13 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் தந்துவிட்டனர். ஆக மொத்தம் இந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக 379 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  சம்மன்

  சம்மன்

  இதுகுறித்து ஒருநபர் விசாரணை ஆணையத்தின் வக்கீல் ஒருவர் கூறும்போது, "14-வது கட்ட விசாரணையில் 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அதில் 13 பேர் ஆஜரானார்கள். அடுத்த கட்டமாக அமைப்புகளை சேர்ந்தவர்கள், ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அதனை தொடர்ந்து போலீஸ் துறை, போலீசில் காயம் அடைந்தவர்கள், வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்தப்படும்" என்றார்.

  பேட்டி

  பேட்டி

  அப்போது, நடிகர் ரஜினிகாந்தையும் விசாரணைக்கு அழைப்பீர்களா என்று கேட்டதற்கு, தேவைப்பட்டால் இந்த சம்பவங்கள் குறித்த விவரங்கள் அறிந்த அனைவரையும் அழைத்து விசாரணை நடத்துவோம்" என்றார். முன்னதாக, துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல ரஜினி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது:

  நம்பிக்கை இல்லை

  நம்பிக்கை இல்லை

  "போராட்டத்தின்போது, சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். போலீசை மட்டும் குற்றம் சொல்வது தவறு. மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் அவர்கள்தான். போலீசை தாக்கியவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் உலகிற்கு காட்ட வேண்டும். இந்த ஒரு நபர் விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று சொல்லி விட்டு கிளம்பினார். இந்த பேச்சு பெரிய பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி விட்டது.

  பெரிய மைனஸ்

  பெரிய மைனஸ்

  வழக்கமான அரசியல்வாதிகளைப்போல், சுற்றி வளைத்து, மூடி மறைத்து பேசாமல், மனதில் நினைப்பதை அப்பட்டமாக வெளிப்படையாக பேசும் ரஜினிகாந்தை வரவேற்கலாம். ஆனால் பேசும் விஷயங்களை, தெளிவாக பதில் செய்யாமல் தவறிவிடுவதே இவரது பெரிய மைனஸாக உள்ளது. அதன் முடிவுதான் இப்படி விசாரணை வளையத்துக்குள் சிக்கும்வரை கொண்டு வந்துவிட்டுள்ளது.

  English summary
  Actor Rajnikanth should be summoned for his comment on Thoothukudi Fire incident
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X