சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஊடகங்கள் வைத்துள்ள பெயர் "மற்றவை".. ராமதாஸ் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஊடகங்கள் வைத்துள்ள பெயர் "மற்றவை" என ராமதாஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மாற்றம் முன்னேற்றம் என்ற கொள்கையுடன் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் அன்புமணி பொதுக் கூட்டங்களை நடத்தி தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கையில் உள்ளது என்பது குறித்து அறிவித்தார்.

கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி.. இன்று மிக அதிக கனமழை! கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி.. இன்று மிக அதிக கனமழை!

எனினும் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வந்தனர். இந்த நிலையில் தனது மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்காகவே ராமதாஸ் யாருடனாவது கூட்டணிக்கு செல்கிறார் என்ற விமர்சனம் இருந்து வந்தது.

அதிமுகவுன் கூட்டணி

அதிமுகவுன் கூட்டணி

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுகவுடனான கூட்டணியில் பாமக இருந்து வருகிறது. நிச்சயம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணியின் மாற்றம் முன்னேற்றம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எனினும் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக அதிமுக ஆதரவுடன் நியமிக்கப்பட்டார்.

5 இடங்கள்

5 இடங்கள்

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவுடன் இணைந்தே பாமக தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில் 5 இடங்களில் பாமக வென்றது. இதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என பாமக முடிவு செய்தது. ஆனால் இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்டும் பாமகவுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது.

ஆன்லைன்

ஆன்லைன்

இதையடுத்து நேற்றைய தினம் பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. நாம் எவ்வளவு பலமான கட்சி தெரியுமா, இப்போது அந்த பலமெல்லாம் எங்கே போனது?

மரியாதை

மரியாதை

எனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே? எனவே இனி ஆதாயத்திற்கு யாரும் கட்சியில் இருக்க வேண்டாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஊடகங்கள் வைத்துள்ள பெயர் "மற்றவை" என தெரிவித்துள்ளார். அதாவது உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குகள் அரசியல் வாரியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது சில ஊடகங்கள் திமுக, அதிமுக என வெளியிட்ட நிலையில் தேர்தலில் போட்டியிட்ட பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளை மற்றவை என்ற பட்டியலில் போட்டுவிட்டு தேர்தல் போட்டி என்பது திமுக- அதிமுகவுக்கு இடையே மட்டும் என்பது போல் சில ஊடகங்கள் பாமகவை மற்றவை என்ற லிஸ்டில் சேர்த்துவிட்டதாக ராமதாஸ் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். பொதுவாக ஒபினீயன் போலில் தேசிய ஊடகங்கள் பெரிய கட்சிகளின் பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு மற்ற மாநில கட்சிகளை மற்றவை லிஸ்டில் சேர்த்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PMK Ramadoss says about medias are calling PMK as Others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X