சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..ஒரு வாரத்தில் நல்ல செய்தி..அரசு அறிவிப்பு

நியாயவிலைக்‌ கடைப்‌ பணியாளர்களின்‌ அகவிலைப்‌ படி உயர்வு குறித்து அரசு கனிவுடன்‌ பரிசீலித்து வருகிறது. இன்னும்‌ ஒரு வார காலத்திற்குள்‌ இதன்‌ மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும்‌ என்பதில்‌ அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்

Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. நியாய விலைக்‌ கடையில்‌ பணியாற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்கள்‌ தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல்‌ பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அரசு அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஜூன் 7ம் தேதி முதல் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Ration shop employees DA: TN govt appeals to protesting ration shop employees

இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது. No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியிருந்தது.

தொடர்ந்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரேசன் கார்டில் பெயர் சேர்க்க..முகவரி திருத்தம் செய்ய.. ஜூன் 11ல் சிறப்பு முகாம் - மிஸ் பண்ணாதீங்க ரேசன் கார்டில் பெயர் சேர்க்க..முகவரி திருத்தம் செய்ய.. ஜூன் 11ல் சிறப்பு முகாம் - மிஸ் பண்ணாதீங்க

இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில்‌ உள்ள நியாயவிலைக்‌ கடைகளில்‌ பணியாற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்களுக்கு அகவிலைப்‌படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின்‌ சங்கம்‌ ஒன்று 3 நாள்‌ வேலை நிறுத்தத்தில்‌ செவ்வாய்க்கிழமை முதல்‌ ஈடுபட்டு வருகின்றது. எனினும்‌, பொது மக்களுக்கு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ வழங்குவதில்‌ இடையூறு ஏற்படாத வகையில்‌ மாற்று ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

நியாயவிலைக்‌ கடைப்‌ பணியாளர்களின்‌ அகவிலைப்‌ படி உயர்வு குறித்து அரசு கனிவுடன்‌ பரிசீலித்து வருகிறது. இன்னும்‌ ஒரு வார காலத்திற்குள்‌ இதன்‌ மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும்‌ என்பதில்‌ அரசு உறுதியாக உள்ளது.

எனவே, நியாய விலைக்‌ கடையில்‌ பணியாற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்கள்‌ தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல்‌ பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Ration shop employees DA: (ரேசன்கடை ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு) Members of a union of fair price shop employees have been striking for the last three days demanding an increase in their dearness allowance. The Government of Tamil Nadu has assured the ration shop employees that a good decision will be taken within a week regarding the increase in the internal rates. The government has announced that vendors and builders working in fair price shops are requested to work without worrying about their demand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X