உங்ககிட்ட வீட்டு லோன் இருக்கா?.. பொன்னான காலம்.. வருகிறது அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு.. அசத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி நான்காவது முறையாக மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக அடுத்த 3 மாதங்களுக்கு பின் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் வீடு மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

repo rate

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதம்

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற வங்கிகள் தங்களின் ரெப்போ இணைப்பு கடன் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளன. இதனால் வீட்டுக் கடன் வாங்குபவர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு இது பயனளிக்கும்.

அடுத்த முறை மேலும் 25 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தில் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சில காலம் பிரேக் எடுத்த 3 மாதத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது, பேங்க் ஆஃப் பரோடாவின் RLLR 8.15% ஆகவும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் RLLR 8.35% ஆகவும் உள்ளது. பெரும்பாலான கடன்கள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் போன்ற வெளிப்புற அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த வட்டி குறைப்பு வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் திருத்தப்பட்ட ரெப்போ இணைப்பு கடன் வட்டிவிகிதம் (RLLR) 8.65% லிருந்து 8.15% ஆக குறைந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் RLLR 8.85% லிருந்து 8.35% ஆக குறைந்துள்ளது.

அதே நேரத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி, கடன் வழங்குவதற்கான குறைந்தபட்ச செலவு விகிதத்தில் (MCLR) எந்த மாற்றமும் செய்யவில்லை. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யு.சி.ஓ வங்கி MCLR விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட MCLR விகிதம் தற்போது 8.15-9.00% என்ற அளவில் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதன் மூலம் பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பால், வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. இதன் விளைவாக, வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதத்தை உடனே குறைக்கவும்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை குறைத்தாலும் கூட இன்னும் வங்கிகள் அதை அமல்படுத்தவில்லை. இதை வாடிக்கையாளர்கள்தான் நேரடியாக வங்கிகளிடம் கேட்டு பெற வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த நடவடிக்கை புதிய வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் இந்த குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால், அவர்களின் மாதாந்திர EMI குறையும் வாய்ப்புள்ளது.

இந்த வட்டி விகித மாற்றங்கள் ஜூன் மாதம் செய்யப்பட்டாலும் ஜூலை மாதம் வசூலிக்கப்படும் இஎம்ஐயில் அமலுக்கு வரும்.

ஆனால் பல நிறுவனங்கள் இதுவரை இந்த மாற்றங்களுக்கான சார்ட்டை வெளியிட்டாலும் கடனாளிகளுக்கு அதை நோட்டிப்பை செய்யவில்லை. அதாவது கடனாளிகள் இந்த மாற்றம் காரணமாக இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைத்துக்கொள்ள முடியும். ஆனால் வங்கிகள் இதில் இன்னும் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்கவில்லை.

கடனாளிகள் விருப்பம் இன்றி இதில் வங்கிகள் முடிவு எடுக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் HDFC உள்ளிட்ட சில வங்கிகள் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்டு இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைக்க உள்ளது. ஆனால் சில வங்கிகள் குறைக்கவில்லை. உங்கள் வங்கி இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைக்காத பட்சத்தில் நீங்கள் உங்கள் கிளையில் ஒரு கடிதம் எழுதி இரண்டில் ஒன்றை.. உங்களுக்கு விருப்பமான ஒன்றை குறைக்கும்படி கூற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+