என்ன இருந்தாலும் முன்னாள் முதல்வர் இல்லையா? ஓபிஎஸ்க்கு நேசக்கரம் நீட்டும் அப்பாவு? தனி அணி சமஉக்கள்?
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு முடிவெடுப்பார் எனவும் தகவல்கள் உலாவுகின்றன.
பல்வேறு விவகாரங்கள் அரசியல் சிக்கல்களுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.
அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு அவை கூடும் நிலையில் கூட்டத்தில் சமீபத்தில் காலமான முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும்.

சட்டமன்ற கூட்டத்தொடர்
அதன் பிறகு சட்டமன்ற அளவில் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பது குறித்து விரிவாக முடிவு செய்யப்படும். இந்த நிலையில் அதிமுக விவகாரம் சட்டமன்ற கூட்டத் தொடரிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதோடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினருமே மாறி மாறி கடிதங்களை அளித்துள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்ததோடு மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்துள்ளார்,. இது தொடர்பாக என்ன முடிவு எடுப்பார் சபாநாயகர் என்பதே அதிமுகவினரின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதிமுக விவகாரம்
இந்த கேள்விகளுக்கெல்லாம் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு விடை அளித்தார். அதில், எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருவருமே கடிதங்கள் அளித்திருக்கிறார்கள். இந்த கடிதங்கள் எனது பரிசீலனையில் இருக்கிறது. சபை மரபுப்படி அனைவருக்கும் இருக்கைகள் வழங்கப்படும். இருவருமே முன்னாள் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். கொள்கை ரீதியாக அவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறது. அதை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். சட்டமன்ற மாண்புபடி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.

விடை கிடைக்குமா?
இதனிடையே சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சமமான இருக்கைகளே ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இருவருமே தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் உரிய முடிவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முடிவு செய்திருப்பதாகவும் அதுவரை ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தனி அணியாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரை அவர் தரப்பில் வைத்தியலிங்கம் உசிலம்பட்டி ஐயப்பன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதிருப்தி அதிமுகவாக செயல்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த விவகாரங்களுக்கு எல்லாம் அக்டோபர் 17ஆம் தேதி விடை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications