சென்னையில் விஷவாவு கசிவு? திடீர் கண் எரிச்சலால் ஷாக்.. தகவல் அறிந்து ஓடி வந்த அதிகாரிகள்- என்னாச்சு?
சென்னை : மணலி அருகே அரியலூர் கிராம சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு திடீரென கண்ணெரிச்சல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து ஆய்வு செய்து குடோனில் இருந்த ரசாயன கசிவால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.
மேலும், அந்த குடோன் உரிமையாளரிடம் அறிவுறுத்தி, உடனடியாக வேதிப்பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மணலி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி, ஆண்டார்குப்பம் செக் போஸ்ட், அரியலுார் கிராமத்தில், தனியார் வேதிப்பொருள் குடோன் உள்ளது. நேற்று காலை மலேசியாவில் இருந்து கன்டெய்னர் லாரியில், எச்.ஐ.வி நோய்க்கான மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்களான, குளோரோ - 2, குளோரோ - 5 உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பேரல்களில் எடுத்து வரப்பட்டன.

பேரலில் கசிவு
20 ஆயிரத்து 840 கிலோ அளவிலான, வேதிப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டது. பேரல் ஒன்றிற்கு 250 கிலோ வீதம், 80 பேரல்கள் வந்துள்ளன. அப்போது பேரலில் திடீர் கசிவு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், அரியலுார் கிராமத்தை ஒட்டிய சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு, கண் எரிச்சல், தொண்டை அலர்ஜி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனால், அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு
இந்த தகவல் அறிந்து, மணலி மண்டல நல அலுவலர் சரஸ்வதி, செயற்பொறியாளர் காமராஜர், மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம், தொழிற்சாலை பாதுகாப்பு துறை துணை இயக்குனர் பாலமுருகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். வேதிப்பொருள் கசிவால், 10 அடி சுற்றளவில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சுற்றுவட்டார கிராம மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணலி பகுதி முழுக்க
பின்னர், அந்த குடோன் உரிமையாளரிடம் அறிவுறுத்தி, உடனடியாக வேதிப்பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரியலுார் வேதிப்பொருள் குடோனில் ஏற்பட்ட கசிவு பிரச்னையை அடுத்து, மணலி மண்டலத்தில் இருக்கும் அனைத்து, தொழிற்சாலைகள், குடோன்களை ஆய்வு செய்யுமாறும், அபாயகரமான ரசாயன மற்றும் வேதிப்பொருட்களை கவனமாக கையாளவும் அறிவுறுத்த வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளுக்கு மண்டல குழு தலைவர் ஆறுமுகம் அறிவுறுத்தினார்.

நடவடிக்கை
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணலியில் ரசாயன கசிவால் பாதிக்கப்பட்ட இடத்தில் பார்வையிட்ட எம்.எல்.ஏ சுதர்சனம், தவறு இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications