அடுத்தடுத்து கசியும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள்..2 தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை
சென்னை: திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான காலம் ஆன்லைன் வழியாகவே பள்ளிகள் நடத்தப்பட்டது. இடையில் சில காலம் பள்ளி திறக்கப்பட்ட போதிலும், டெல்டா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாகப் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் கல்வியில் பாகுபாடு இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறிய நிலையில், இந்தாண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதன்படி தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில், சில பள்ளிகள் மூலம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே வெளியாவதாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற அறிவியல் தேர்வு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கணித தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே இணையத்தில் வெளியானதாகக் கூறப்பட்டது. அதேபோல 12ம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்குரிய வினாத்தாளும் முன் கூட்டியே வெளியாகியுள்ளது.

வழக்கமாகத் திருப்புதல் தேர்வுகள் வினாத்தாள்கள் சில மணி நேரத்திற்கு முன்பு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும். அப்போது சில பள்ளிகள் மூலம் வினாத்தாள்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வினாத்தாள்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம், வந்தவாசி ஹாசினி ஆகிய 2 தனியார் பள்ளிகளில் இருந்து 10, +2 தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக அந்த 2 தனியார்ப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications