ரூ.1000 அக்கவுண்ட்டில் எப்போ வரும்? கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் விடுபட்டோருக்கு வந்த நம்பிக்கை தகவல்
சென்னை: மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்துவிட்டு பலரும் காத்திருக்கிறார்கள்.. இவர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து கொள்ள பலமுறை அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.. இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கும் நம்பிக்கை வார்த்தைகள், பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து மகளிருக்கும், மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.. பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே இந்த பணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 1 கோடியே 16 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தினால் பயன் பெற்றுள்ள நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு, இன்னும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்கிறார்கள்.
எனவே, இவர்கள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்துவிட்டு, காத்திருக்கிறார்கள்.. இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.. இப்படி பரிசீலனையில் இருக்கும்போது உரிமைத் தொகை வரவு வைக்கப்படாது.. அனைத்து பரிசீலனை விண்ணப்பம் ஏற்கப்பட்டால் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்குக்கு வரும்.
விண்ணப்பங்கள்: சிலசமயம், விண்ணப்பங்களில் தவறான விவரங்கள் தரப்பட்டிருந்தாலோ, அல்லது ஆவணங்கள் மாற்றி தரப்பட்டிருந்தாலோ, அல்லது ஆவணங்களை தராமலேயே இருந்தாலோ அக்கவுண்ட்டில் பணம் வராது.. எனவே, மொபைல் எண் சரியாக தரப்பட்டுள்ளதா? ஆதார் அட்டை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.
ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள், நீங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் என்பதற்கான ஆதாரங்களை இணைந்து இ-சேவை மையம் மூலம் வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் விண்ணப்பதாரரின் செல்போனுக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும். அதற்காகத்தான் செல்போன் நம்பரை சரியாக பிழையின்றி தரவேண்டும் என்கிறார்கள்.
தளர்வுகள்: அதேபோல, பொருளாதார தகுதியில் சில தளர்வுகளை அளித்து மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாமை மீண்டும் நடத்த வேண்டும் என்றும், விடுபட்டவர்களுக்கு உடனடியாக உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் தமிழகம் முழுவதும் பரவலாக எழ துவங்கியிருக்கிறது.
இதுகுறித்த நம்பிக்கையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பெண்களிடம் அளித்துவருகிறார்.. 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை சென்றிருந்தார் உதயநிதி ஸ்டாலின்..
உரிமைத்தொகை: அப்போது அங்கிருந்தவர்கள் கலைஞர் உரிமைத்தொகை இந்த பகுதியில் பெரும்பாலான பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றனர். அதறகு உதயநிதி, "அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கும்" என்று உறுதி அளித்து விட்டு சென்றார்.
அதேபோல, இன்று திண்டுக்கல்லில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, "மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று எல்லாரும் சொன்னார்கள்.. கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ், இதுவரைக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 தரப்படுகிறது.
பெருத்த நம்பிக்கை: விடுப்பட்ட சிலருக்கும், கருணாநிதி உரிமை திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை வழங்க, முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து, வழங்குவார் என்ற உறுதிமொழியை நான் இங்கு உங்களிடம் கூறுகிறேன்" என்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கும் இந்த வாக்குறுதி, பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications