நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது! எழுத்தாளர் தேவி பாரதி எல்லையற்ற மகிழ்ச்சி!
சென்னை: எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 24 மொழிகளில் வெளியாகும் தலை சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படைப்புகள் மொழி வாரியாக தேர்வு செய்யப்பட்டு விருதும், பரிசுத் தொகையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும்.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதில் எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழவில் விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
நீர்வழிப் படூஉம் நாவலை எழுதிய எழுத்தாளர் தேவி பாரதியை பொறுத்தவரை ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை பூர்வீகமாக கொண்டவர். இவரது இயற்பெயர் ராஜசேகரன் என்பதும் தேவி பாரதி என்ற பெயரில் பல படைப்புகளை இவர் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிழலின் தனிமை, நொய்யல் , அற்ற குளத்து அற்புத மீன்கள், உள்ளிட்ட நூல்களை தேவி பாரதி எழுதியுள்ளார். இவைகளை தவிர இன்னும் பல படைப்புகளை கடந்த 45 ஆண்டுகளாக எழுதி வருகிறார்.
இதனிடையே தனது நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது செய்தியாளர்களிடம் பேசிய எழுத்தாளர் தேவி பாரதி, தனது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், சாகித்ய அகாடமி விருது இன்னும் தனக்கு உத்வேகத்தை தரும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழில் தேவி பாரதியை போல் மலையாளர்த்தில் இ.வி.ராமகிருஷ்ணனுக்கும், தெலுங்கில் பதஞ்சலி சாஸ்திரிக்கும், கன்னடத்தில் லட்சுமிஷா தொல்பதிக்கும், இந்தியில் சஞ்சீவுக்கு சாக்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வழிப் படூஉம் நாவல் ஆசிரியர் எழுத்தாளர் தேவி பாரதிக்கு இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், புத்தக வாசிப்பாளர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications