பிக் பாஸ் சாக்ஷி வெளியிட்ட ட்வீட்.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.. இவ்வளவு விஷயம் இருக்கா..!!?
சென்னை:பிரபல நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான சாக்ஷி அகர்வால் தன்னுடைய ட்டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள ஒரு வார்த்தை ட்டுவிட்டை அஜித் ரசிகர்கள் ட்ரண்ட் செய்வதோடு, வாழ்த்துக்களையும் கமெண்ட் களில் கூறி வருகின்றனர்.
தமிழ் அகராதி மட்டுமில்லை ஆங்கில அகராதிகளிலும் சாக்ஷி அகர்வால் பதிந்துள்ள வார்த்தைக்கு எங்கள் தல தான் ஏற்றவர் என்று கொண்டாடி வருகின்றனர்.
சாக்ஷி அகர்வால் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவால் சமூக வலைத்தளத்தில் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் வாழ்த்துக்கள் மலை போல உயர்ந்து வருகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
சாக்ஷி அகர்வால் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மாடன் உடையில் சாக்ஷி அகர்வால் நடத்தும் போட்டோ சூட் புகைப்படங்கள் எப்போதுமே அவருடைய ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். சில நேரங்களில் புடவையில் வந்தாலும், பல நேரங்களில் மாடர்ன் உடையில் தான் சாக்ஷி அகர்வால் ரசிகர்களுக்கு தரிசனத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சாக்ஷி பல நேரங்களில் ரசிகர்களுக்கு மோட்டிவேஷனலாக உடற்பயிற்சி செய்து வேர்க்க விருவிருக்க வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவுரைகளையும் கூறி வருகிறார்.

ட்ரெண்டான வார்த்தை
ஒரு சில நாட்களாக ட்விட்டரில் ஒரு வார்த்தை ட்டுவிட் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிரபலங்கள் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை ஒரே வார்த்தையில் ட்டுவீட் செய்வதுதான் ஒரு வார்த்தை ட்டுவீட் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் தங்கள் சொல்லவரும் கருத்துக்களை ஒரே வார்த்தையில் தடாலடியாக கூறி ட்டுவீட் செய்து வருகின்றனர் அந்த வரிசையில் தற்பொழுது சாக்ஷி அகர்வாலும் இணைந்துள்ளார்.

பிக் பாஸில் அறிமுகம்
குட்டி டவுசர் போட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் சுற்றியே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், படங்களை விட இவரை சமூக வலைதளங்களில் பார்க்கவே இவர் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர்.அந்த அளவிற்கு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களை இவர் சூடாகவே வைத்திருப்பார்.சாப்ட்வேர் துறையில் பெரிய பெரிய படிப்புகள் படித்திருந்தாலும் மாடலிங் மூலம் சினிமாவில் சாதிப்பதற்காக தன்னம்பிக்கையுடன் முயன்று வருகிறார்.

தன்னம்பிக்கைக்கு தனி அகராதி
விசுவாசம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள சாக்ஷி அகர்வால்,அஜித்தை போலவே தானும் எந்தவித பெரிய பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சாதிக்க முயன்று வருவதால்,தன்னை பற்றி ஒரு வார்த்தை ட்டுவிட் செய்வதற்கு "தன்னம்பிக்கை" என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் தன்னம்பிக்கை என்றால் தல தான்..தல என்றால் தன்னம்பிக்கை என்றும்... தன்னம்பிக்கைக்கு உதாரணமே அஜித் தான் என்றும் சாக்ஷி அகர்வால் ட்டுவீட்டுக்கு கமெண்ட் செய்வதோடு மட்டுமின்றி, "தன்னம்பிக்கை" என்ற வார்த்தை டிரெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications