வியர்க்க விறுவிறுக்க சமந்தா.. கிஸ்க் கிஸ்க் சத்தத்தால் செம கோபம்! என்னப்பா நீங்க இப்படி பன்றீங்களே!
சென்னை: நாக சைதன்யாவுடனான பிரிவு, மையோசிடிஸ் நோய் பாதிப்பு, இயக்குனருடன் காதல் என கிசுகிசுக்களில் சிக்கி வந்த சமந்தா தற்போது திரைத்துறையில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பொதுவெளியில் அவர் கோபத்துடன் நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஜிம்மில் இருந்து வெளியே வந்த வரை புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்ததால் சமந்தா கோபமடைந்ததாக சொல்லப்படுகிறது.
தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமாகி அதற்குப் பிறகு விஜய், சூர்யா என முன்னணி நாயகர்களுடன் கரம் கோர்த்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியவர் சமந்தா. அது மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.
சினிமாவில் பிஸியாக இருக்கும் போது பல நாயகர்களுடன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பிரபல நட்சத்திர குடும்பத்தில் இணைந்தார். தமிழ் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வந்த நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் திரையுலகில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார். தொடர்ந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் புயல் வீச தொடங்கியது. ஆசை ஆசையை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா - சமந்தா ஜோடி பிரிந்தது. திரையுலகில் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில் சில நாட்களில் சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கூறிய நாகசைதன்யா அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இதனால் சமந்தாவின் ரசிகர்கள் பலரும் நாகசைதன்யா குடும்பத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். சோபிதாவும் கேலி கிண்டலுக்கு ஆளானார். இது ஒரு புறம் இருக்க மயோசிடிஸ் என்ற அரிய வகை தசைவு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை ஒரு புறம் சினிமா ஒருபுறம் என பிசியாக இருந்து வரும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு இதுவரை குறையவில்லை. இடையே பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோருடன் சமந்தா காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் பரவின. ஏற்கனவே திருமணம் ராஜ் நிடிமோருவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் சமந்தா குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் சமந்தா மும்பையிலே தங்கி இருக்கிறார். அந்தேரி பகுதியில் உள்ள ஜிம்மில் அவர் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வந்திருக்கிறார் சமந்தா. அப்பொழுது அவரது கார் சற்று தொலைவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சமந்தா வருவதை பார்த்த சில பொதுமக்களும் புகைப்படக்காரர்களும் அவரை சூழ்ந்து கொண்டு வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கின்றனர். இதனால் கோபமடைந்த சமந்தா தயவுசெய்து நிறுத்துங்கள் என கூறி அவரது ஓட்டுநரை தொலைபேசியில் அழைத்து உள்ளார். தொடர்ந்து கார் வந்ததும் அதில் வேகமாக ஏறி கோபத்துடன் புறப்பட்டார். பிரபலங்கள் என்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்கு சுதந்திரம் தர வேண்டும், ஜிம்முக்கு செல்லும்போது, ஹோட்டலுக்கு செல்லும் போதெல்லாம் அவர்களை தொல்லை செய்யக் கூடாது என சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications