சன்னரக அரிசி 30 ரூபாய்க்கு விற்பனை.. 5 கிலோ வெறும் ரூ.150 தான்! தமிழக அரசு சலுகையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரிசி, பருப்பு, எண்ணெய் என அத்தியாவசிய பொருட்களின் விலை எகிறிக்கொண்டிருக்கும் நிலையில், ஏழை எளிய மக்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தமிழக அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை எவ்வளவு அரிசி விற்பனையாகியுள்ளது தெரியுமா?

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சன்னரக அரிசியை கிலோ ரூ.30 (பொட்டலத்துடன்) என்ற விலையில் விற்பனை செய்யும் திட்டம் கடந்த 17-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.

Sannaraga Rice Price Cheap Rice Scheme Cooperative Stores

கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

முதற்கட்டமாக சென்னையில் 11 அமுதம் அங்காடிகள், 19 கூட்டுறவு அங்காடிகள் என மொத்தம் 30 இடங்களில் விற்பனை தொடங்கியது. இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அங்காடிகள் - அரிசி விற்பனை

இந்த திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 25,000 மெட்ரிக் டன் சன்னரக அரிசியை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள், 49 அமுதம் அங்காடிகள் என மொத்தம் 250 அங்காடிகள் மூலம் அரிசி விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வாங்கலாம். அதாவது, 5 கிலோ அரிசிக்கு ரூ.150 செலுத்தினால் போதும். அரிசி விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்படும் நிலையில், இந்த விற்பனை மக்களுக்கு ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

184 கடைகளில் 16 டன் விற்பனை

இந்நிலையில், அக்டோபர் 21-ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 34 மாவட்டங்களில் உள்ள 184 விற்பனை நிலையங்கள் மூலம் மொத்தம் 16 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரிசி ஒதுக்கீடு

தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 574.058 மெட்ரிக் டன் அரிசி 34 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றில் 439.108 மெட்ரிக் டன் அரிசி விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 1,286 கிலோ விற்பனை

மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் மொத்தம் 184 விற்பனை நிலையங்கள் மூலம் சன்னரக அரிசி விற்பனை நடைபெற்று, 21.10.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 16 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் உள்ள 19 விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை 1,286 கிலோ சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மாநகராட்சி வணிக வளாக விற்பனை முனையில் 298 கிலோவும், கார்த்திகேயன் சாலையில் உள்ள விற்பனை முனையில் 178 கிலோவும், பார்க் டவுன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் விற்பனை முனையில் 120 கிலோவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+