என்னை யாராலும் தடுக்க முடியாது... எதிர்கட்சியாக இருக்கும் போதே தொண்டர்களை நீக்குவதா - சசிகலா ஆடியோ
கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சி அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன் என்று சசிகலா கூறியுள்ளார்.
சென்னை: எதிர்கட்சியாக இருக்கும் போது அதிமுகவினரை நீக்குவது கஷ்டமாக இருக்கிறது என சசிகலா வேதனையுடன் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பாரதி என்பவருடன் சசிகலா பேசும் 42வது ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார்.
Recommended Video
அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டு விட்டு ஆன்மீக பயணம் போனார் சசிகலா. திடீரென்று அமைதியாக இருந்த அவர் தற்போது தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் என தொடர்ச்சியாக பேசி வருகிறார். அதிமுக என் உயிரில் கலந்தது அதை பிரிக்க முடியாது என்று கூறினார் சசிகலா.
சசிகலா உடன் பேசும் நபர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுகவினர் 15 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

மதுரை தொண்டரிடம் பேச்சு
சசிகலா உடன் பேசியவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னரும் மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா பேசியுள்ளார். அந்த ஆடியோவும் வெளியானது. இது சசிகலா ரிலீஸ் செய்த 41ஆவது ஆடியோ ஆகும்.

சந்திக்க வருவேன்
கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன்.

எத்தனை பிரச்சினை
1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடன் இருந்து எதிர்கொண்டுள்ளேன். அதில் இருந்து மீண்டு வந்துதான் ஆட்சியை அமைத்தோம். எனவே, இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது இல்லை.

என்னை யாரும் தடுக்க முடியாது
ஜெயலலிதாபோல நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம். நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசிய சசிகலா தற்போது நெல்லையைச் சேர்ந்த பாரதி என்பவருடன் சசிகலா பேசும் 42வது ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

புகழேந்தியை நீக்குவதா
அந்த ஆடியோவில், அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதே கட்சியினரை நீக்குவது கஷ்டமாக இருக்கிறது என சசிகலா பேசியுள்ளார். புகழேந்தியை நீக்கியுள்ளது ஆச்சரியத்தை தருவதாகவும் கூறியுள்ளார் சசிகலா. நான் விரைவில் வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆடியோ ரிலீஸ் தொடர்கதை
தினம் தினம் ஆடியோக்களை சசிகலா ரிலீஸ் செய்தாலும் அவரால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர். கட்சியை விட்டு நீக்கினாலும் சசிகலா உடன் தொண்டர்கள் பேசுவது தொடர்கதையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications