தமிழ்நாடு அரசியலே தலைகீழாகப் போகுது.. அய்யாவை சந்தித்த சின்னம்மா! தைலாபுரத்தில் பரபரத்த மீட்டிங்!
சென்னை: தமிழக அரசியலில் புதிதாக கூட்டணி அமையுமா? என பரபரப்பு நிலவி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய அரசியல் சந்திப்பு தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைலாபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் வாய்ப்புகள் மாறி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் ராமதாஸ் வசித்து வருகிறார். அங்கு இன்று சென்ற சசிகலா அவருடன் நேரடியாக சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினார் என்று கூறப்படுகிறது.

சசிகலா ராமதாஸ்
இந்த சந்திப்பு சுமார் 1.30 மணி நேரத்துக்கும் மேல் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக தற்போதைய அரசியல் சூழலில் புதிய கூட்டணிகள் உருவாகும் வாய்ப்பு குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தைலாபுரம் சந்திப்பு
ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை பெரிய கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன. இதனால் இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்து மாற்றுக் கூட்டணி உருவாக்குவது குறித்து அரசியல் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த வகையில் V. சசிகலா மற்றும் ராமதாஸ் இடையேயான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளும் இல்லாத ஒரு மாற்றுக் கூட்டணி உருவாக்குவது குறித்து இருவரும் கருத்து பரிமாறிக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமக சசிகலா கூட்டணி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மற்றும் அதிமுக தலைவர்களிடையே இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியிலிருந்து விலகியிருந்தார். அதன் பின்னர் சில காலம் அரசியலில் இருந்து விலகி இருந்த அவர், சமீபத்தில் மீண்டும் அரசியல் களத்தில் செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சசிகலா புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்தார்.
சசிகலா புதிய கட்சி
அந்த நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களை கொண்ட புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த நேரத்தில் கட்சியின் பெயரை உடனடியாக அறிவிக்காமல், பின்னர் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது வரை அந்த புதிய கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தல்
இந்நிலையில் கட்சியின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ராமதாஸை நேரில் சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு தமிழக சட்டசபை தேர்தலில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications