தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் 6 முதல் 12 இடங்களைப் பிடிக்கும் என்றும், 19.2% வாக்குகளைப் பெறும் என்றும் என்று போல் டிராக்கர் (Poll Tracker) கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்கள் இப்போதே நகரத் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஓட்டத்தில், 'போல் டிராக்கர்' (Poll Tracker) வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கோட்டை நோக்கிய பயணத்தில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதைப் போட்டு உடைத்திருக்கிறது.

அறிவாலயத்தின் 'மெகா' உற்சாகம்!
இந்தக் கணிப்பின்படி, ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்யும் எனக் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், திமுக கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றி அரியணையைத் தக்கவைக்கும் என்கிறது இந்த ரிப்போர்ட். 42.7 சதவீத வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொண்டு, அசைக்க முடியாத சக்தியாக திமுக உருவெடுத்துள்ளது அண்ணா அறிவாலய உடன்பிறப்புகளை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம்: மெயின் பிக்சரில் இல்லையா?
இந்தக் கணிப்பின் மிகவும் உற்றுநோக்கப்பட வேண்டிய அம்சம், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK). முதல் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம், 19.2 சதவீத வாக்குகளை அள்ளும் என்று சொல்லப்பட்டாலும், இடங்களைப் பொறுத்தவரை வெறும் 6 முதல் 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
அரசியல் களத்தில் 'மூன்றாவது முனை' அல்லது 'மாற்று' என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், பிரதானப் போட்டியில் (Main Picture) திமுக அல்லது அதிமுகவுக்கு நிகரான ஒரு சவாலை இன்னும் எட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது. வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தில் இருந்தாலும், அது வெற்றியாக மாறாமல் சிதறுவது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
எடப்பாடியின் நிலைப்பாடு மற்றும் இதர கட்சிகள்
அதிமுக: 30.3 சதவீத வாக்குகளுடன் 46 முதல் 52 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக நீடிக்கும் எனத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு சவாலான காலகட்டமாகவே இருக்கும்.
நாம் தமிழர் கட்சி: சீமானின் நாம் தமிழர் கட்சி 5.1 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், 0 முதல் 2 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கணிப்பு கூறுகிறது.
மற்றவர்கள்: இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 2.8 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என இந்த சர்வே 'பஞ்ச்' வைக்கிறது.
கள நிலவரம் மாறுமா?
"வாக்குகள் பிரிவது விஜய்க்குச் சாதகமா அல்லது திமுகவுக்குப் பாதகமா?" என்ற விவாதங்கள் இப்போதே கிளம்பிவிட்டன. 19 சதவீத வாக்குகளைப் பெற்றும் மெயின் பிக்சருக்குள் வராமல் போனது தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், கூட்டணிக் கணக்குகளும், அரசியல் வியூகங்களும் மாறலாம். ஆனால், இப்போதைய நிலவரப்படி 'போல் டிராக்கர்' முடிவுகள் உதயசூரியனை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்திருக்கிறது. கோட்டை யாருக்கு என்பது இன்னும் சில காலங்களில் தெரிந்துவிடும்!
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications