இத்தனை கேமரா இருக்கே? மன்னார்குடி பக்கம் வீசும் ‘மாஜி’ காற்று! போட்டுடைத்த சசிகலா! ஷாக்கான இபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவும் கைகோர்ப்பார்களா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் சசிகலா இன்று அளித்திருக்கும் பதிலானது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் பலர் தங்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது தான் ஹைலைட்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை அதனை ஆரம்பித்து வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கே தெரியுமா? தெரியாதா? என அவரது ஆதரவாளர்களே கடுமையான மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

அதிமுக பொதுக்குழு நிர்வாகிகள் இடையே கிடைத்த அமோக வரவேற்பு இடையில் இரு நீதிமன்ற தீர்ப்புகள் என எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் திடீரென உச்சத்தை சந்தித்தாலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு மற்றும் தற்போது உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உள்ளிட்ட நகர்வுகள் அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இடையே அடிக்கடி ஓ.பன்னீர்செல்வம் போதாது என்று சசிகலாவும் அதிமுகவை கைப்பற்ற போகிறேன் அனைவரையும் ஒன்றிணைக்க போகிறேன் எனக் கூறி வருவதும் அவருக்கு சில மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாக வெளியாகும் தகவலும் எடப்பாடி பழனிச்சாமி தரத்தை ஒருவித அச்சத்திலேயே வைத்திருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் சசிகலா நேரடியாக அதிமுகவை கைப்பற்றும் படலத்தில் களமிறங்கினால் நிச்சயம் அவருக்கு சில மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு அளிப்பாளர்கள் என்பதை அவர் உணர்ந்தே இருக்கிறார்.

 சசிகலாவுக்கு ஆதரவு

சசிகலாவுக்கு ஆதரவு

கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரு முன்னாள் அமைச்சர்களும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று முன்னாள் அமைச்சர்களும் சசிகலாவுக்கு நேரடியாக ஆதரவு தருவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதனால் அவர்களுக்கு பல முக்கிய பதவிகளை அளித்து எந்த பக்கமும் போகாமல் தன் பக்கமே வைத்துக் கொள்ளும் நடவடிக்கையிலும் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டிருக்கிறார். இப்படி தன்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து பார்த்து விட்டாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அதிமுக விவகாரங்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த நிலையில் தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றினை சசிகலா கூறி இருக்கிறார். அதாவது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தன்னுடன் பேசி வருவதாக அவர் கூறியிருக்கிறார் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,"கட்சி ஒன்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதிமுகவின் தொண்டர்கள் இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றனர்" என கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை

எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை

அப்போது திடீரென கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் உங்கள் சந்திப்பு எப்போது என கேட்டார். ஓபிஎஸ்ஐ சந்திப்பது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றுதான் அவர்களை நான் பிரித்துப் பார்க்கவில்லை என்றார். அப்போது அதிமுக எம்எல்ஏ கூட நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்து சசிகலா இத்தனை கேமரா முன்னால் அது எப்படி உங்களிடம் சொல்ல முடியும் என கூறினார். இது தான் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. சந்தித்து பேசினார்கள் அல்லது இல்லை என ஒரே வார்த்தையில் முடிக்க வேண்டிய கேள்விக்கு சசிகலா இப்படி இழுத்து இருப்பதற்கு என்ன காரணம் என்று தான் எடப்பாடி ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். இதன் மூலம் சசிகலா அதிமுக எம்எல்ஏக்களுடன் பேசி வருவது உறுதி என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+