விரைவில் அரசியல் பயணம்.. தனித்தா? கூட்டணியா?.. சசிகலா சொன்ன பதில் என்ன தெரியுமா?
சென்னை: விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என கூறிய சசிகலாவிடம் அரசியல் பயணம் தனியாகவா இல்லை கூட்டணியாகவா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
Recommended Video
அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பை அளித்தது. இதுகுறித்து மேல்முறையீடு செய்வேன் என சசிகலா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சசிகலா. இதைத் தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் இரு தினங்கள் விசாரணை நடத்தப்பட்டன.

சசிகலா
விசாரணையில் பல்வேறு வாக்குமூலங்களை சசிகலா அளித்திருந்ததாக தெரிகிறது. இந்த விசாரணை முடிந்ததும் சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் கொடநாடு எஸ்டேட் மற்றவர்களுக்கு வேண்டுமானால் சாதாரண இடமாக இருக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை என் அக்கா (ஜெயலலிதா) மிகவும் நேசித்த இடம். அவருக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் தந்த இடம்.

கொடநாடு பங்களா
எங்களை பொருத்தவரையில் கொடநாடு பங்களா ஒரு கோயிலாகத்தான் பார்த்தோம். எங்கள் கட்சிக்காரர்களும் அப்படித்தான் பார்த்தார்கள். கொடநாடு வழக்கில் அடுத்தடுத்த மரணங்கள் நடந்துள்ளன. எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவரது தாயும் மரணமடைந்துள்ளார். எனவே இந்த மரணங்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆன்மீக பயணம்
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஆன்மீக பயணம் முடிந்தவுடன் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளேன். பொதுச் செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிச்சயம் மேல்முறையீடு செய்வேன் என்றார்.

கூட்டணியா தனித்தா
இந்த நிலையில் திருக்கடையூர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சசிகலா செய்தியாளருக்கு பேட்டியில் அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்ற கேள்விக்கு, இங்கு தான் இருக்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.

தினகரன் குறித்த கேள்வி
மேலும், உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா?' என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்லாத சசிகலா, "கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து அப்புறம் பதிலளிக்கிறேன்" என தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications