'இரட்டை தலைமை' எல்லாம் சரிப்பட்டு வராது.. சசிகலாவுக்கு கீழ் அதிமுக வரும்.. கார்த்தி சிதம்பரம் பளிச்
சென்னை: அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றும் விரைவில் சசிகலா அக்கட்சியின் தலைமையை ஏற்பார் என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த சசிகலா இந்தாண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். சட்டசபை தேர்தலில் சசிகலாவின் தாக்கம் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது,
இருப்பினும் தேர்தலுக்கு சில காலம் முன் தான் அரசியலில் இருந்து ஒதுக்கியிருப்பதாக அறிவித்தார். இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு கடந்த சில வாரங்களாகவே அவர் அதிமுக தொண்டர்களுடன் உரையாடி வருகிறார்.

சசிகலா ஆடியோ
இது தொடர்பான ஆடியோக்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முதலில் இதை மறுத்த அதிமுக தலைமை, பின்னர் இது தொடர்பாக 15க்கும் மேற்பட்ட நிர்வாகிகளைக் கட்சியிலிருந்து நீக்கியது. இந்நிலையில், இன்று சசிகலாவின் புதிய ஆடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில் அவர் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் நிச்சயம் அதிமுக தலைமை ஏற்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

சசிகலா தலைமை
இந்நிலையில், சசிகலா தலைமையில் விரைவில் அதிமுக செயல்படத் தொடங்கும் எனக் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இன்று மயிலாடுதுறை எம்எல்ஏ அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுகவால் எப்போதும் இரட்டை தலைமையின் கீழ் செயல்பட முடியாது. இப்போது நடைபெறும் நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது, அதிமுக விரைவில் சசிகலா தலைமை கீழ் செயல்படத் தொடங்கும்.

நீட் தேர்வு
தமிழ்நாட்டைப் பொருத்தவரை நீட் தேர்வு என்பது தேவையற்ற ஒன்று தான். இதைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இப்போது தமிழ்நாடு அரசு உள்ளது. இந்த ஆண்டில் நீட் தேர்வு நடந்தாலும்கூட, தமிழ்நாடு அரசின் முயற்சி நிச்சயம் அடுத்தாண்டு வெல்லும். மேலும், கொங்கு நாடு கோரிக்கையை யாரும் முன் வைக்கவில்லை. அதைக் காங்கிரஸ் ஆதரிக்கவும் செய்யாது" என்றார்.

பாஜக
தொடர்ந்து மத்திய பாஜக அரசு குறித்துப் பேசிய அவர், "பாஜகவில் பழைய தலைவர்கள் அனைவரும் ஓரம் கட்டப்படுகின்றனர். வாஜ்பாய், அத்வானி காலத்திலிருந்து கட்சிக்காக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மோடி தனது விசுவாசிகளுட்டு மட்டுமே முக்கிய பதவிகளை வழங்குகிறார்" என்றும் அவர் விமர்சித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications