சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி மாவட்டத்தை அள்ளும் திமுக.. கோவில்பட்டியை கெத்தாக தூக்கும் தினகரன்.. சத்தியம் டிவி சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று தெளிவாக சத்தியம் டிவி கருத்து கணிப்பு கூறுகிறது.

கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் 26% வாக்குகள் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

சத்தியம் டிவி கருத்து கணிப்பு

சத்தியம் டிவி கருத்து கணிப்பு

ஆளும் கட்சியான அதிமுக ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. இந்த முறை விட்டால் இனி முடியாது என்ற வகையில் திமுகவும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தலைவர்களின் தேர்தல் பிரசாரம் ஒரு பக்கம் நடந்தாலும், மறுபுறம் தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம்

இந்த நிலையில் சத்தியம் டிவி சார்பில் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் 30%; அதிமுக- 20%; அமமுக- 18%; நாம் தமிழர் 11%; மநீம- 10% வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் யார்?

திருச்செந்தூரில் யார்?

திருச்செந்தூர் தொகுதியில் திமுக 35%; அதிமுக-19%; நாம் தமிழர் 16%; அமமுக-11; மநீம-7% வாக்குகள் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளாத்திகுளம் தொகுதியில் திமுக 31%; அதிமுக-6%; அமமுக- 16%; மநீம- 15%; நாம் தமிழர் 11% வாக்குகள் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக 27% ; அதிமுக 23%; புதிய தமிழகம் - 19% வாக்குகள் பெறும் என்றும் கூறியுள்ளது.

 டி.டி.வி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு

டி.டி.வி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு

தூத்துக்குடி தொகுதியில் திமுக 36% ; த.மா.கா. 34%; நாம் தமிழர் 14%; தேமுதிக- 9%; மநீம-5% வாக்குகள் பெறும் என்றும் கூறுகிறது. அடுத்தபடியாக ஸ்டார் அந்தஸ்து பெற்ற கோவில்பட்டி தொகுதியில் அமமுக 26%; சி.பி.ஐ. 25%; அதிமுக 24%; நாம் தமிழர் 12% மநீம-11% வாக்குகள் பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் 26% வாக்குகள் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு 24%; வாக்குகளுடன் 3-வது இடத்தை பிடிப்பார் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இந்த மாவட்டத்தில் மொத்த தொகுதிகளையும் சேர்த்து பார்த்தால் திமுக ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது.

English summary
Satyam TV poll clearly shows that DMK is dominant in Thoothukudi district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X