தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: மத்திய அரசுக்கு இணையாக உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு
ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கல்வி பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஆதி திராவிட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் கல்வி உதவித் தொகை மத்திய அரசு ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு இணையானதாகும்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு இணையாக மாநில அரசும் வழங்கும் என தமிழக அரசு மானியக்கோரிக்கையின் போது அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை பயிலக்கூடிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித் தொகைக்கு இணையாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட 2,100 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாயாகவும் தினசரி வீடு சென்று வரும் மாணவர்களுக்கு 1,200 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டிப்ளமோ படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு 2,700 ரூபாயிலிருந்து 9,500 ரூபாயாகவும் தினசரி வீடு சென்று வரும் நபர்களுக்கு 1,680 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட 4,200 ரூபாயிலிருந்து ஆண்டுதோறும் இனி 13,500 ரூபாயாகவும் தினசரி வீடு சென்று வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுத் தொகை 2,100 ல் இருந்து இனி 7,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
-
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி!












Click it and Unblock the Notifications