பள்ளிக்கல்வித்துறை கொடுத்த முக்கிய அப்டேட்! பள்ளி மேலாண்மைக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு!
சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து வகைப் பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்பட்டன.

இந்த அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடைய பதவிக் காலம் 2024 ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் முடிவடைய உள்ளன.
2024-2025 ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேரும் மாணவர்களின் பெற்றோர்களையும் உள்ளடக்கிய புதிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்கும் பொருட்டு, 2022-2024 ஆம் ஆண்டிற்கான தொடக்கப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 1-5-2020 முதல் 10-8-2024 வரையும், நடுநிலைப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 24-4-2024 முதல்
20-7-2024 வரையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 10-7-2024 முதல்17-8-2024 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்குரிய அரசாணை 29-2-2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அரசுப் பள்ளிகளில் நேற்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 5 வயதை பூர்த்தி செய்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தி வருகிறார். இந்தாண்டு பட்ஜெட்டில் கூட பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் முதலமைச்சர் ஸ்டாலின்ரூ.44,042 கோடி ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதற்கட்டமாக விரைவில் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications