தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு உத்தரவு
சென்னை : நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை தற்போது பள்ளிகள் இயங்குகின்றன. நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரை முழுமையாக பள்ளிகள் இயங்க போகின்றன.
கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், தொடக்க பள்ளி மாணவர்களுக்கு இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தொடக்க பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது,

நவம்பர் 1முதல்
கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் முதல் மூடப்பட்டுள்ள தொடக்க பள்ளிகள் வரும் நவம்பர் 1 முதல் திறக்கப்பட உள்ளன. நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் முழுமையாக நவம்பர் முதல் இயங்க போகின்றன

உலக சுகாதார மையம்
உலக சுகாதர மைய தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பள்ளி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகம் ஏற்படுவதில்லை. பள்ளிகளை திறக்க வேண்டியது அவசியம் என்றார். பள்ளிக்குச் செல்வதால் தான் கொரோனா பரவுகிறது என்பது தவறான தகவல் என கூறியிருந்தார். இந்நிலையில் நவம்பர் முதல் தொடக்க பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் முழுமையாக இயங்க போகிறது. தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 2020 மார்ச் மாதத்தில் மூடப்பட்டது. அதன்பிறகு சரியாக சுமார் 20 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது. தற்போது வரை ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஆர்வம் காட்டும் மக்கள்
தற்போது தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் கொரோனா பெரிய அளவில் பரவவில்லை. சொல்லப்போனால் கொரோனா குறைந்து வருகிறது. பெரிய பாதிப்பை தமிழகத்தில் தற்போது ஏற்படுத்தவில்லை. இது ஒருபுறம்எனில் தமிழகததில் 18 வயதுக்கும் மேற்பட்ட பலரும் ஒருடோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இரணடு டோஸ் போட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. வரும் நவம்பர் 1க்குள் பெரும்பாலானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்பார்கள் என்பதால் அரசு பள்ளிகளை திறக்கும் முடிவிற்கு வந்துள்ளது.

முடிவு ஏன்
1முதல் 8ம்வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு சரியாக 20 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 1ம் தேதி செல்ல போகின்றன. அரசின் அறிவிப்பால் குழந்தைகள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். கொரோனா பரவல் தமிழகத்தில் கட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்படுகிறது. முன்னதாக பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனைகளை கேட்ட தமிழக அரசு அதன்பிறகு மருத்துவ குழுவினருடன் ஆலோசனை செய்தது. அதன் அடிப்படையிலேயே நவம்பர் 1முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications