மிரட்ட வரும் மாண்டஸ்! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்! எங்கெங்கே தெரியுமா?
சென்னை : வங்கக் கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்று அழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது மேலும் தீவிரம் அடைந்து மாண்டோஸ் எனும் புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது அடுத்த வரும் சில மணிநேரங்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை தமிழக கடற்கரையை நெருங்கும். இதனால் தமிழகத்தில் நாளை முதல் மழை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாண்டஸ் புயல்
இது சென்னை-புதுச்சேரி இடைப்பட்ட மாமல்லபுரம் அருகே வரும் 9ஆம் தேதி அல்லது 10 ஆம் அதிகாலைக்குள் கரையை கடக்கும். இது நிகழ்வு கரையை நெருங்கும் போது வலுகுறைந்து தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் எனவும், வங்கக்கடலில் நீடிக்கும் மாண்டோஸ் எனும் புயலால் தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மழைக்கு வாய்ப்பு
குறிப்பாக முதலில் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும். பிறகு படிப்படியாக டெல்டா, உள் மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்கள்,என தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 9ஆம் தேதிக்குள் மழை தொடங்கும். இந்த சுற்று மழையில் தென் மாவட்டங்கள் மட்டும் குறைவான மழை பெரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
மற்ற கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் நல்ல மழைக்கான வாய்ப்பு காணப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய மாவட்டங்களாக சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை
வங்கக் கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications