அரசியலில் குதிக்க பிரபல நடிகை பலே பிளான்: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரை களமிறக்கி புதிய அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் எப்போதுமே சினிமாவுக்கும் செய்திக்கும் பஞ்சம் இல்லாத ஒன்று. தவெக தலைமையிலான அரசு தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்தச் சூழலில், கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஒரு பரபரப்பான 'ஸ்கூப்' தகவல் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

திரைத்துறையில் பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் ஒரு பிரபல நடிகை, மிக விரைவில் அரசியலில் தீவிரமாக களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஆளுங்கட்சிக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருக்கும் இந்த நடிகை, அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

tvk

பிரபல அரசியல் ஆலோசகருடன் கைகோர்ப்பு

சினிமாவில் பெரிய வெற்றி பெற்றது போல அரசியலிலும் வெற்றி பெற வெறும் பிரபலம் மட்டுமே போதாது என்பதை அந்த நடிகை நன்கு உணர்ந்துள்ளார். அதற்காக, இந்திய அளவில் பல முக்கிய தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்காக வியூகம் வகுத்து வெற்றியைத் தேடித்தந்த ஒரு பிரபல அரசியல் ஆலோசகரை அவர் தனக்காகத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசகர் கடந்த காலங்களில் பல மாநில தேர்தல்களில் வேலை செய்து, தலைவர்களின் பொது இமேஜ் முதல் தேர்தல் பிரச்சார உத்திகள் வரை பல வெற்றிகரமான திட்டங்களைச் செயல்படுத்தியவர். தற்போது இந்த நடிகைக்காக முழுநேர அரசியல் வழிகாட்டியாக அவர் செயல்படத் தொடங்கியுள்ளார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ரோடு ஷோ முதல் பேச்சு வரை புதிய உத்திகள்

நடிகை அண்மையில் கலந்துகொண்ட சில பொது நிகழ்ச்சிகள் மற்றும் பிரம்மாண்ட ரோடு ஷோக்களுக்குப் பின்னணியில் இந்த அரசியல் ஆலோசகரின் திட்டங்களே இருந்ததாகப் பேசப்படுகிறது.

மக்கள் மத்தியில் எப்படிப் பேச வேண்டும்? கூட்டத்தை ஈர்க்கும் விதத்தில் எந்த மாதிரியான உடைகள் மற்றும் உடல் மொழியைக் கையாள வேண்டும்? பொதுமக்களிடம் எளிமையாகப் பழகும் வகையிலான செயல்பாடுகள் என்னென்ன?

போன்ற அனைத்து விஷயங்களையும் அந்த ஆலோசகரின் குழுவே பார்த்துப் பார்த்து வடிவமைத்து வருகிறதாம். குறிப்பாக, சமீபத்தில் நடந்த ரோடு ஷோவில் மக்கள் மத்தியில் அவருக்குக் கிடைத்த வரவேற்பு, இந்தத் திட்டத்தின் முதல் கட்ட வெற்றி என்றே அவரது தரப்பில் பார்க்கப்படுகிறது.

வாய்ப்பைப் பயன்படுத்தத் திட்டம்:

தமிழகத்தில் தற்போது ஆளும் தவெக அரசுடன் நல்ல நட்பிலும் நெருக்கமான தொடர்பிலும் இருக்கும் இந்த நடிகை, இந்தக் காலகட்டத்தை தனது அரசியல் பயணத்திற்குச் சரியான அடித்தளமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். ஆட்சியில் தனக்குள்ள செல்வாக்கை வைத்து, பெண்கள் நலன் மற்றும் முக்கிய சமூகப் பிரச்சனைகள் சார்ந்த தளங்களில் முன்னணியில் நிற்க அவர் காய் நகர்த்தி வருகிறார்.

வெறும் நடிகையாக மட்டும் நின்றுவிடாமல், எதிர்காலத்தில் கட்சியில் முக்கியப் பொறுப்பு அல்லது மக்கள் பிரதிநிதி பதவி.. துணை முதல்வர் வரை செல்வதே அவரது இலக்கு என்கிறார்கள்.

எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

அரசியல் ஆலோசகரின் வழிகாட்டுதலின்படி, அடுத்தடுத்த மாதங்களில் மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் வகையிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் அந்த நடிகை தொடர்ந்து பங்கேற்கப் போகிறாராம். மக்களின் வரவேற்பைக் கவனித்துவிட்டு, சரியான தருணத்தில் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.

சினிமாவில் கோலோச்சிய அந்த நடிகை, தேர்தல் வியூக வகுப்பாளரின் ஆதரவோடு அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+