ஆர்எஸ்எஸ் சித்தாந்த ஆதரவு! மணிகண்ட பூபதி நியமனத்தை ரத்து செய்யுங்க! எஸ்டிபிஐ தலைவர் வலியுறுத்தல்
சென்னை: கல்வி தொலைக்காட்சியின் சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ள மணிகண்ட பூபதி முழுக்க முழுக்க திராவிட வெறுப்பும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த ஆதரவு எண்ணமும் கொண்டவர் என பல்வேறு தரப்பினரால் வெளிப்படையாக குற்றம்சாட்டப்படுவதால் அவரது நியமனத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதி என்பவர் நியமனம் செய்யப்பட்டது. இதனை தமிழக பள்ளிக்கல்வி துறை செய்தது. இதற்கு திமுகவினர் மற்றும் திமுக தோழமை கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது தற்போது பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. மணிகண்ட பூபதி ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர் எனக்கூறி அவரது நியமனத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மணிகண்ட பூபதி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்டிபிஐ கண்டனம்
இந்நிலையில் தான் மணிகண்டன பூபதி நியமனத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2019 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. இந்த தொலைக்காட்சியானது கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அனைத்து வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் அவரவர்களுக்கு உரிய பாடதிட்டங்கள் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தொடங்கி, தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்று வருகின்றது.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்
முழுக்க முழுக்க கல்வி அதிகாரிகள் மூலம் செயல்பட்டு வந்த கல்வி தொலைக்காட்சிக்கு தற்போதைய திமுக அரசு தலைமைச் செயல் அதிகாரியை (CEO) நியமிக்க முடிவு செய்து, அதற்கான விண்ணப்ப அறிவிப்புகளை கடந்த மே 28 ஆம் தேதி அறிவித்தது. சுமார் 70 பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை பரப்பி வரும் சாணக்யா யூ-ட்யூப் தொலைக்காட்சியின் இணை நிறுவனர் மணிகண்ட பூபதி என்பவர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசு கவனம் கொள்ள வேண்டும்
ஒரு நிறுவனத்தின் கொள்கை வழிப் போக்கை தீர்மானிப்பவர் அதன் சி.இ.ஓ என சொல்லப்படும் தலைமைச் செயல் அதிகாரி தான் என்கிற போது, புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பேசிவரும் சாணக்யா சேனலின் இணை நிறுவனர் ஒருவரை, அதற்கு நேர் எதிரான கல்விக் கொள்கை கொண்ட தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வழிகாட்டியாக நியமிப்பது சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது. மணிகண்ட பூபதியை தேர்வு செய்ய வேண்டும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது எனவும், இதில் தமிழக கவர்னர் ஆர்வம் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அத்தகைய நியமனம் மூலம் தமிழக மாணவர்களின் மனதில் நஞ்சை விதைப்பதாக ஆகிவிடும் என்ற பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடனே ரத்து செ்ய வேண்டும்
முழுக்க முழுக்க திராவிட வெறுப்பும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த ஆதரவு எண்ணமும் கொண்டவர் என பல்வேறு தரப்பினரால் வெளிப்படையாக குற்றம்சாட்டப்படும் மணிகண்ட பூபதியின் நியமனத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, கல்வி, சமூகநீதி சிந்தனை, ஊடகத்துறை அனுபவம் கொண்ட தகுதியுள்ள ஒரு நபரை தமிழக அரசு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். அதற்கான தகுதியுள்ள நபர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் உள்ளனர். தமிழக அரசு அவர்களை கண்டறிந்து நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

விழிப்புடன் செயல்பட வேண்டும்
சமூக நீதி ஆட்சி என கூறப்படும் திமுக ஆட்சியில் இதுபோன்று முக்கிய பொறுப்புக்கள், நியமனங்கள், உத்தரவுகளில் சமூக நீதிக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படுவது தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றது. சமூக நீதி இயக்கங்கள், ஜனநாயக அமைப்புகள் சுட்டிக்காட்டிய பின்னரே அதுபோன்ற உத்தரவுகள் வாபஸ் பெறப்படுவது அல்லது நிறுத்தி வைப்பது போன்றவை மேற்கொள்ளப்படும் நிலையில், முன்கூட்டியே அதுதொடர்பான தகவல்கள் உளவுத்துறை மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கவில்லையா? என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆகவே, இதுபோன்ற சறுக்கல்கள், தவறுகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications