விமான நிலையத்தில் மாஸ்க்கோடு வந்த திரிஷா! ஐடியை செக் பண்ணாத ஆபிசர்ஸ்! சர்ச்சை கிளப்பும் நெட்டிசன்ஸ்!
சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரையும் முகக்கவசத்தை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை வைத்து பரிசோதிக்கும் தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் நடிகை திரிஷாவை மட்டும் சோதனை செய்யாமல் அனுப்பியதாகவும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை சர்வதேச விமான நிலையம் ஒன்றாக திகழ்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் தினம் தோறும் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள மதுரை, திருச்சி விமான நிலையங்களை விட மிகவும் பிஸியான விமான நிலையமாக சென்னை விமான நிலையம் உள்ளது. ஏனென்றால் இங்கு இருந்து தான் பல நாடுகளுக்கும் நேரடி விமான போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது.

சென்னை விமான நிலையம்
ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தமிழக போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் சோதனை
விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மூன்று கட்ட சோதனைகளை தாண்டியே செல்ல வேண்டும் விமான நிலைய வளாகத்திற்கு வருவதற்கு முன்னதாகவும் விமான நிலைய செக்-இன் பகுதியிலும் வரவேற்பு பகுதியிலும் சோதனைகள் நடத்தப்பட்டு அதன் பின்னரே விமான பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

அடையாள அட்டை
இந்த நடைமுறை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும். பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்திவிட்டு விமான நிலையத்திற்கு உள் நுழையும் பயணிகளை மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் அவர்களது அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்த பிறகு உள்ள அனுமதிப்பார். தற்போது கொரோனா காலம் என்பதால் பயணிகள் முக கவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை அகற்றி அடையாள அட்டையை பரிசோதித்த பிறகு விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

நடிகை திரிஷா
இந்த நிலையில் தான் நடிகை திரிஷாவை மட்டும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடிகை திரிஷா சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொண்டார். அவரை தனியார் செக்யூரிட்டி ஒப்பந்த ஊழியர் ஒருவர் விமான நிலைய வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார். மற்ற பயணிகளை நிறுத்தி தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் அடையாள அட்டை மற்றும் முக கவசத்தை அகற்ற சொல்லி சோதனை செய்த நிலையில் தனியார் செக்யூரிட்டி ஊழியர் இவர் திரிஷா என கூறியதும் எதுவும் கேட்காமல் மத்திய தொடர்ப பாதுகாப்பு படையினர் திரிஷாவை விமான நிலையத்திற்குள் அனுமதித்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications