ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. பெரியார் பேரைச் சொல்லி ஏமாத்திட்டாங்களே! வேதனையுடன் பேசிய செங்கோட்டையன்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரும் முறைகேடு நடந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பெரியாரின் புனித பெயரை சொல்லிக் கொண்டு பெரியார் நூலகத்தில் இப்படி நடைபெறுவது உண்மையில் வேதனை அளிக்கிறது எனவும், இதில் முறைகேடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி இருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

கோவை காந்திபுரத்தில் தி.மு.க ஆட்சியில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஏழு தளங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Sengottaiyan

இந்த நூலகம் தான் தற்போது மிகப்பெரிய ஊழல் புகாரில் சிக்கியுள்ளது. இந்த நூலகத்தை பார்வையிட்ட பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது 'சிந்தை' தளத்தில் எழுதிய கட்டுரை தான் இந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அந்த கட்டுரையில் அவர் பல அதிர்ச்சி தகவல்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

பெரியார் அறிவுலகம்

யாருக்கும் தெரியாத 'அகல் விளக்கு' என்ற பதிப்பகத்தின் பெயரில் சுமார் 1800 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் சாதாரணமாக மற்ற பதிப்பகங்கள் ரூ.350-க்கு விற்கும் நாலடியார் நூலை 'நாலடியார் வாழ்வின் வழிகாட்டி' என்ற பெயரில் சூர்யா பாலு என்பவர் எழுதியதாக கூறி ரூ.1445-க்கு வாங்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல நூல்களில் மதுரைக்காஞ்சியை எழுதியவர் மதுரைக் கூழத்திப் பெருவழுதி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக ஆட்சி

இந்த பரபரப்பு கட்டுரையை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் இது குறித்து பேசியுள்ளார். பெரியார் பெயர் வைத்த நூலகத்திலேயே இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருப்பது வெட்கக்கேடானது என்றும் இது திமுக ஆட்சியில் நடந்த மெகா ஊழல் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஊழல்

இந்த விவகாரத்தில் திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன. திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக தமிழக வெற்றிக் கழகமும், தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தான் புத்தகங்கள் வாங்கப்பட்டதாக திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் கிளப்பி இருக்கிறது.

செங்கோட்டையன்

இந்நிலையில், இந்த நிலையில் பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி இருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," பெரியார் நூலகத்தை முதல்வர் வந்து திறந்து வைத்தார். இன்று அந்த துறையின் அமைச்சர் பெரியார் நூலகத்தில் புத்தகங்கள் வாங்குவதில் பல்வேறு தவறுகள் நடைபெற்று இருக்கிறது ஊழல் நடந்துள்ளது என சொல்லி இருக்கிறார்.

பெரியார்

பெரியார் வழியில் வந்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பெரியார் நூலகத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது உண்மையில் வெறும் வேதனையை தருகின்றது. இது போன்ற தவறுகளை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. பதிப்பகம் இல்லாத நூலகங்களில் இருக்கின்ற புத்தகங்கள் இருக்கின்றது என்ற நிலையை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

வேதனை

எத்தனை பக்கங்கள் இருக்கிறது, அதற்கு என்ன விலை என்பதையும் குறிப்பிட்டு காட்டப்பட்டு இருக்கிறது. பெரியாரின் புனித பெயரைச் சொல்லிக் கொண்டு பெரியார் நூலகத்தில் இப்படி நடைபெறுவது உண்மையில் வேதனை அளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதிலும் கூட ஊழல் நடந்து இருக்கிறதா என மக்கள் பேசும் அளவிற்கு இருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+