செங்கோட்டையனை வைத்து இலையை விழுங்கும் தாமரை.. முறியுதா அதிமுக பாஜக கூட்டணி? அண்ணாமலையின் தனிக்கட்சி?
சென்னை: பொறுப்பிலிருந்து செங்கோட்டையனை நீக்கிவிட்டாலே, கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டதாக அர்த்தம், செங்கோட்டையன் பக்கம் இனி அதிமுகவினர் யாரும் செல்ல மாட்டார்கள் என்று பத்திரிகையாளர் பாண்டியன் கூறியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, அதிமுகவை பிளக்க நினைக்கிற பாஜகவுக்கு, தேர்தலில் அதிமுக தொண்டர்கள் எப்படி ஓட்டுப்போடுவார்கள்? என்றும் பேட்டியொன்றில் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாண்டியன்.
Retroluxe என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "அதிமுகவை இடையூறு செய்வதற்காக, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், செங்கோட்டையன் சந்திப்பு என்பது நடக்கவில்லை.. ஏனென்றால், அதிமுகவை பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இணைந்துள்ளது.. இதில் எந்த குழப்பமும் இல்லை.

ஆனால் செங்கோட்டையன் விவகாரம் என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம்.. எடப்பாடி பழனிசாமியை டெல்லியில் அமித்ஷாவை சந்திப்பதற்கு முன்பு, பாஜகவுக்கு செங்கோட்டையன், டிடிவி, சசிகலா, ஓபிஎஸ், வேலுமணி உட்பட அத்தனை பேரும் தேவைப்பட்டார்கள்,
சின்ன சின்ன சக்திகள்
இத்தனை பேரும் எடப்பாடியை வழிக்கு கொண்டு வருவதற்கு பாஜகவுக்கு அன்று தேவைப்பட்டனர்.. எடப்பாடியை வழிக்கு கொண்டுவருவதற்கான சின்ன சின்ன சக்திகள் மேற்கண்ட நபர்கள்.. இந்த சின்ன சக்திகள் சேர்ந்து, பெரிய சக்தியான எடப்பாடியை வழிக்குகொண்டு வர பயன்படுத்தப்பட்டதற்கு காரணம், அதைவிட பெரிய சக்தியான திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதால்தான்.
இதுதான் பாஜகவின் அஜெண்டா.. இது வெற்றியடைந்துவிட்டது.. அமித்ஷா, அதிமுக கூட்டணி வைத்தாகிவிட்டது.. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன.. இப்போது செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.. பிறகு ஹரித்துவாருக்கு போவதாக சொல்லி கிளம்பி சென்றார் செங்கோட்டையன்..
அமித்ஷா செங்கோட்டையன் சந்திப்பு
இந்நிலையில், அமித்ஷாவிடம் சந்திப்புக்கான ஏற்பாட்டை பிஎல் சந்தோஷ்
போன்றோர் செய்தனர்.. எல்லா பதவியிலிருந்தும் செங்கோட்டையனை நீக்கிவிட்டதால், எடப்பாடி பழனிசாமியை மிரட்டுவதற்கான சந்திப்பாக இது நிச்சயம் இருக்க முடியாது.. அதேசமயம், 55 வருடமாக இருந்த அதிமுகவின் தொடர்பு, தற்போது அந்நியப்பட்டுவிட்டது என்பதை புலம்புவதற்காகவே, அமித்ஷாவிடம் சந்திப்புக்கான நேரம் கேட்டிருக்கிறார் செங்கோட்டையன். அவ்வளவுதான்.
இது தெரிந்துதான் எடப்பாடிக்கு இன்னும் கோபமாகிவிட்டது.. ஆனால், இதனை அதிமுகவுக்கு எதிரான சக்தி பயன்படுத்தி கொண்டது. எனினும் இது பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வி.. அதிமுகவை பிளக்க நினைக்கிற பாஜகவுக்கு, தேர்தலில் அதிமுக தொண்டர்கள் எப்படி ஓட்டுப்போடுவார்கள்?
இலையை விழுங்கும் தாமரை
பாஜகவின் தாமரை இரட்டை இலையை விழுங்க போகிறது, செங்கோட்டையனை வைத்து சிதைக்க பார்க்கிறது என்றால், அதிமுக தொண்டன் எப்படி பாஜகவுக்கு ஓட்டுப்போடுவான்? இப்படியொரு தற்கொலை முயற்சியை ஏன் பாஜக கையில் எடுத்தது? செங்கோட்டையனை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஏன் சந்திக்க வேண்டும்? என்பதுதான் பலரது சந்தேகமாக உள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி, சசிகலா என்று 3 பேருமே அதிமுகவுக்குள் பதவி கேட்டு வருகிறார்கள்.. இப்போது 4வது நபராக செங்கோட்டையனும் பதவி கேட்கிறார். இந்த 4 பேருக்குமே வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிசாமி..
அண்ணாமலை தனிக்கட்சி
ஆனால் இந்த 4 பேருமே எவ்வளவு ஓட்டு சதவீதத்தை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இவர்கள் எந்த தேர்தலையும் எதிர்த்து சந்திக்கக்கூடிய நிலைமையிலும் இல்லை.. அதனால், அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்தால், அவருடன் இணைந்து கொள்ளலாம், பிறகு அனைவரும் சேர்ந்து விஜய்யுடன் இணைந்துவிடலாம் என்று நினைப்பதாகவும், ஒரு செய்தி வலம் வருகிறது.
அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிப்பது 100 சதவீதம் உண்மை.. அண்ணாமலைக்கு டெல்லியில் இன்னமும் செல்வாக்கு உள்ளது.. எனவே அமித்ஷாவுடனான செங்கோட்டையன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததும் அண்ணாமலைதான்.. அதாவது பிஎல் சந்தோஷ் இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை செய்ததாக சொல்கிறார்கள்..
புயலுக்கு பின்பு அமைதி
இவ்வளவும் தெரிந்துதான், எடப்பாடி பழனிசாமி அமைதியாக உள்ளார். புயலுக்கு முன்பு இப்படித்தான் அமைதியாக இருக்கும்.. இனி செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்துதான், பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்வதா? அல்லது உடைத்து கொண்டு வெளியேறுவதா? என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். எனவே இந்த கூட்டணி செங்கோட்டையனை வைத்துதான் தற்போது உள்ளது..
தொடர்ந்து அதிமுகவை சீண்டினால், தொண்டர்களே பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications