நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா 'நீக்கம்’! ராயப்பேட்டையின் ரத்தத்தின் 'ரத்தம்'..!அடுத்தடுத்த ட்விஸ்ட்!
சென்னை : அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் காலையில் ராயப்பேட்டையில் ரத்தக் களரியான சம்பவம் முதல் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்...
Recommended Video
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு எடுத்து அதிமுகவில் அடுத்தடுத்து அதிகாரப் போட்டிகள், முட்டல் மோதல்கள், அறிக்கைகள் குழப்பங்கள் என திருப்பங்களை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுகவின் பொது செயலாளர் ஆகவும் தமிழகத்தின் முதல்வராகவும் பதவியேற்க திட்டமிட்டிருந்த சசிகலாவின் கனவு நீதி மன்ற தீர்ப்பால் கைவிட்டுப் போன நிலையில் அடுத்ததாக அவர் தேர்ந்தெடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றி
கட்சியிலும் ஆட்சியிலும் நான்கு ஆண்டுகளில் தனது செல்வாக்கை ஆலமரம் போல பலப்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சசிகலா ஓபிஎஸ் என இரு தரப்பு நிறையும் சமாளித்து இன்று பொதுச் செயலாளராக கட்சி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுக்குழு கூட்டத்தில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் அவமானப்படுத்தப்பட்ட ஓ பன்னீர்செல்வம் அதன் பிறகு அதிமுகவின் ஒற்றை தலைமையாய் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பதை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்தும் கைகூடாமல் போனது. கிட்டத்தட்ட 99 சதவீத மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

அதிமுக பொதுக்குழு
நீதிமன்ற தீர்ப்புகளும் கை கொடுக்காத நிலையில் இன்று திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியது இந்த இடத்தில் அதிகாலை முதலே நிர்வாகிகளும் குவிய தொடங்கினர். காலை ஆறு முப்பது மணிக்கு தனது வீட்டில் இருந்து பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி வானகரம் வந்தடைவதற்கு 9 மணி ஆனது இடைப்பட்ட நேரத்தில் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அதிமுக அலுவலகம் நோக்கி புறப்பட்டார் ஓ பன்னீர்செல்வம். ஓபிஎஸ் இன் தலைமை அலுவலகம் நோக்கிய பயணம் குறித்த செய்திகள் வெளியான நிலையில் உடனடியாக பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தொண்டர்களுக்குள் தாக்குதல்
அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் சரிசமமாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் குவிய தொடங்கினர் ஓபிஎஸ்ஐ அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக எடப்பாடி ஆதரவாளர்கள் திட்டமிட்ட போதிலும் தொடர்ந்து முன்னேறினார் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதையடுத்து பலத்த கலவரம் மூண்ட நிலையில் இரு தரப்பினரும் கற்களை வீசியும் கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. ஓபிஎஸ் தரப்பு தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அங்கிருந்து பின்வாங்கினார்.

கதவு உடைப்பு
அதையடுத்து கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஓபிஎஸ் தொண்டர்களை பார்த்து ஜெயலலிதா நின்ற அதே இடத்திலிருந்து உற்சாகமாக கை அசைத்தார். அதே நேரத்தில் சென்னை வானகரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எடுத்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்த நீதிபதிகள் ஓபிஎஸ்யும் கடுமையாக விமர்சித்து இருந்தனர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் உற்சாகமடைந்த எடப்பாடி பழனிச்சாமி கருப்பு ஏற்கனவே திட்டமிட்டு இருந்த தீர்மானங்களை நிறைவேற்றினர் குறிப்பாக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து இடைக்கால பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர் தேர்தல் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அடுத்தடுத்து வெளியிட்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

ஓபிஎஸ் நீக்கம்
தொடர்ந்து தீர்மானங்களை முன்மொழிந்து பேசிய முன்னாள் அமைச்சர்களான கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் தங்கமணி ஆர் பி உதயகுமார் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி வானளவு புகழ்ந்ததோடு பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக கேபி முனுசாமி தங்கமணி திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் பேசியபோது பொதுக்குழுவில் பங்கேற்கின்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ்ஐ கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார் நத்தம் விஸ்வநாதன். இதையடுத்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் ஓபிஎஸ் மட்டுமல்லாமல், அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோறும் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்பு
இப்படி ஒருபுறம் அதிமுக அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து நடப்பதை நிமிடத்திற்கு நிமிடம் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்ட தகவல் வந்ததை எடுத்து செய்திகளை சந்தித்தவர் தன்னை யாரும் கட்சியிலிருந்து நீக்க முடியாது எடப்பாடி பழனிச்சாமி கே பி முனுசாமி ஆகியோரை நான் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என கூறினார். அதே நேரத்தில் தொண்டர்கள் ஒன்றிய வேண்டும் என சசிகலாவும் திடீர் என களத்தில் இறங்க தற்போது அதிமுக வட்டாரத்தில் சூடு பிடித்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி சமாளிக்க ஓ பன்னீர் செல்வமும் சசிகலாவும் கை கோர்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஜெயலலிதாவும் நீக்கம்
இதில் எதிர்பாராத பல திருப்பங்களும் நடைபெற்றது குறிப்பாக அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பதவி நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதனையும் அங்கு இருந்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். காரணம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் இணைந்த பிறகு அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்றும் அந்த பதவியில் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன நிதி நிலையில் தான் அதிமுகவில் நிரந்தர பொது செயலாளர் என்ற பதவி ரத்து செய்யப்படுவதாகவும் பொது செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அதில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலமாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications