"சிக்கி சீரழிந்த டீச்சர்".. 4 முறை அபார்ஷன்.. டிவி சீரியல் நடிகரின் அட்டூழியம்.. பரபரக்கும் விசாரணை

டிவி சீரியல் மேனேஜர் டீச்சரை ஏமாற்றி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு டீச்சரை கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி.. சீரியலில் சான்ஸ் வாங்கி தருவதாகவும் சொல்லி.. கர்ப்பமாக்கி.. அபார்ஷனும் செய்ய வைத்துள்ளார் டிவி சீரியல் மேனேஜர்.. அவருக்கு 52 வயசாகிறதாம்..!

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த டீச்சர் அவர்... 30 வயதாகிறது.. அங்கிருக்கும் ஒரு பிரைவேட் ஸ்கூலில் வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு ரகு என்பவர் அறிமுகமாகி உள்ளார்..

52 வயதான ரகு, சினிமா மற்றும் சீரியல்களில் மேனேஜராக வேலை பார்த்து வருவதாகவும் சொல்லி அறிமுகமாகி உள்ளார்.. அவ்வப்போது சில சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.. டீச்சரை சீரியலில் நடிக்க வைப்பதாகவும் நெருங்கி பழகி உள்ளார்.. டீச்சருக்கு மேக்கப் டெஸ்ட்டும் எடுத்துள்ளார்..!

 அனுதாபம்

அனுதாபம்

தன் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டதாகவும், தனக்கு அன்பு பாசம் கிடைக்கவில்லை என்று , அதனால் உன்னையே கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று டயலாக்குகளை அள்ளி விட்டுள்ளார்..இதை நம்பி டீச்சரும் நெருங்கி பழக,4 முறை கர்ப்பம் ஆனாராம்.. 4 முறையுமே அபார்ஷன் செய்துள்ளார். ஊட்டி, கொடைக்கானலுக்கு பலமுறை அழைத்தும் சென்றுள்ளார்..

 டூவீலர்

டூவீலர்

ஆனால் ரகு, நாளடைவில் டீச்சரை கழட்டிவிட்டு மெல்ல மெல்ல விலக தொடங்கி உள்ளார்.. மேலும் டீச்சரின் டூவீலரையும், 2 சவரன் செயினையும் ரகு எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.. பிறகுதான் சீரியல் சான்சும் இல்லாமல், கல்யாணமும் செய்து கொள்ளாமல் ரகு ஏமாற்றுவதை அறிந்து, சிட்லபாக்கம் போலீசில் சென்று புகார் அளித்துள்ளார் டீச்சர்..

 நகை - பைக்

நகை - பைக்

ஆனால், ரகுவை போலீசார் அழைத்து விசாரிக்கவில்லையாம்.. வெறும் பைக்கையும், நகையையும் மட்டும் திருப்பி வாங்கி தந்துவிட்டு, புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க தயங்கியதாக கூறப்படுகிறது.. இதையடுத்து, தனது புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடக்கோரி, கோர்ட்டுக்கு சென்று முறையிட்டார் டீச்சர்..

மிரட்டல்

மிரட்டல்

இதையடுத்து, டீச்சரின் புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றமும் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனாலும் போலீசார், 8 மாதமாக காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகின்றது.. இதனிடையே ரகு, டீச்சரை மிரட்ட தொடங்கி உள்ளாராம்.. தன் மீது தந்த புகார்களை வாபஸ் பெறுமாறு மிரட்டி வருகிறாராம்.. இதனால், போலீசார் இது தொடர்பாக நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று டீச்சர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+