• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

2020ஐ அதிர வைத்த காசி.. காரிலேயே உல்லாசம்.. நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள் நாசம்.. !

|

சென்னை: இந்த வருடம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் ஆபாச செயலால் அதிர வைத்தவர் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர்... நாளைய எதிர்காலம் என்று நம்பி கொண்டிருக்கும் இதுபோன்ற சில இளைஞர்களின் செயல்கள் வெட்கி தலைகுனியும் நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டு விடுகிறது!

நாகர்கோவிலை சேர்ந்தவர்தான் காசி.. 26 வயது.. கட்டுமஸ்தான உடலை வைத்திருப்பவர்.. அந்த உடல்தான் அவரது மூலதனம்.. அதை காட்டியே பல பெண்களை அழித்தவர்.. நாசம் செய்தவர்.. மோசடி செய்து பணம் கறந்தவர்!

இவர் அப்பா சுகுனா சிக்கன் கடையின் நாகர்கோவில் டீலர் ஆவார்.. அதனால் சொந்தமாக கோழிப்பண்ணையும் வைத்திருக்கிறார்.. சின்ன வயதில் இருந்தே செல்வசெழிப்பில் புரண்ட காசியை, வீட்டில் யாரும் கண்டிக்காமலேயே விட்டுவிட்டனர் போலும்.

காலேஜ்

காலேஜ்

அதனால்தான், ஸ்கூல் படிக்கும்போதே, சக தோழிகளை காதல் என்ற பெயரில் ஏமாற்றி சீரழித்துள்ளார்.. காலேஜ் போன பிறகு இந்த பழக்கம் மேலும் அதிகமானது.. வயது வித்தியாசமின்றி சிறுமிகள் முதல், அந்த சிறுமிகளின் அம்மாக்கள் வரை காசியின் லீலைகள் தொடர்ந்திருக்கின்றன.. மகளின் எதிர்காலம், தன் எதிர்காலம் என மொத்தமும் கெட்டுப்போய்விடும் என்பதால், எதையுமே இவர்கள் வெளியே சொல்லாமல் மூடி மறைத்து வந்துள்ளனர்.

 சிபிசிஐடி

சிபிசிஐடி

சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டர் மூலமாகத்தான் இந்த விஷயம் முதன்முதலில் வெளி உலகத்துக்கு வந்தது.. அப்போதுதான் தோண்ட தோண்ட, காசியின் கோரமுகம் தெரியஆரம்பித்தது.. போலீசார் இது சம்பந்தமான விசாரணையை கையில் எடுத்து வந்தபோதிலும், வழக்கின் தன்மையை கொண்டு மே 27 ஆம் தேதி காசி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

 கோழிப்பண்ணை

கோழிப்பண்ணை

தற்போது காசி கைதாகி ஜெயிலில் உள்ளார். இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என பல கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்... லேப்டாப்பில் தான் எல்லா வீடியோக்களும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தேடிய நிலையில் ரகசிய லேப்டாப் ஒரு கோழிப்பண்ணையில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால் மீட்கப்பட்ட லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்களை, காசியின் அப்பா தங்கபாண்டியன் அழித்துவிட்டாலும், அதனை போலீசார் மறுடிபயும் மீட்டுள்ளனர்.

விஐபிக்கள்

விஐபிக்கள்

அந்த லேப்டாப்களில் யார் யார் இருந்தனர் என்பது தெரியும்.. 80-க்கும் மேற்பட்ட பெண்களை காசி ஏமாற்றியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்தது... இதில், நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள் என பல தரப்பினரையும் காசி விட்டு வைக்கவில்லை என்று கருதப்பட்ட நிலையில்தான், அனைத்து ஆதாரங்களும் சிக்கி உள்ளன.

 உல்லாசம்

உல்லாசம்

சில தினங்களுக்கு முன்புகூட, காசியால் பாதிக்கப்பட்ட பெண் புகார் தந்துள்ளார்.. சென்னையைச் சேர்ந்த அந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். அந்த மாணவியை பார்க்க சென்னை வந்த அவர், காதலிப்பதாக கூறியுள்ளார். பின்னர் அந்த மாணவியை கன்னியாகுமரிக்கு வரவழைத்து காரிலேயே உல்லாசம் அனுபவித்து அதை வீடியோவாக எடுத்துள்ளார்.

வீடியோ

வீடியோ

இப்படி கிட்டத்தட்ட 150 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்ததாக போலீசார் சொல்கிறார்கள்.. ஒரு கையில் புட்டி, ஒரு கையில் குட்டியுடன் சுற்றி கொண்டே இருப்பார் என்கிறார்கள் காசியை நேரில் பார்த்தவர்கள்.. இப்போது காசியின் நிலைமையே தலைகீழாகி உள்ளது.. இவரை ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம், பழைய துடிப்பு அவரிடம் அடங்கி போய் இருப்பதை காண முடிகிறது... மொத்த வாலையும் சுருட்டிக் கொண்டு வந்து போகிறார்.

 எலும்பும்.. தோலுமாய்..

எலும்பும்.. தோலுமாய்..

இதே கோர்ட்டில்தான் முதன்முதலில் கைதாகி அழைத்து செல்லும்போது, அங்கிருந்த பெண்களுக்கு கைகளில் ஹார்ட்டின் ஷேப் காட்டி கெத்து காட்டினார்.. இத்தனைக்கும் அப்போது பக்கத்திலேயே பாதுகாப்பு போலீசார் நின்றிருந்தும், இந்த சேட்டையை செய்தார் காசி. ஆனால், தற்போது ஆளே மெலிந்து போய் காணப்படுகிறார்.. முன்பு இருந்த உடம்பு இப்போது அவரிடம் இல்லை.. எலும்பும் தோலுமாக வந்த காசியை பார்க்கும்போதெல்லாம், ஆடிய ஆட்டமெல்லாம் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும் என்ற முன்னோர்கள் சொன்ன வார்த்தைகளே நினைவுக்கு வந்து போகின்றன.

 
 
 
English summary
Shocking Crime News 2020: NagarCoil Youth Kasis case issue
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X