Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அண்ணியுடன்" பாக்கியராஜ்.. மருமகளைக் கெடுத்த மாமனார்.. 2020ஐ உலுக்கிய காம காதல்கள்.. !

அண்ணியுடன் தகாத உறவு கொண்டதால், பல கொலைகள், தற்கொலைகள் குடும்பத்தில் நடந்துள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணி என்பவர் இன்னொரு அம்மாவுக்கு சமம் என்று உறவுக்கு அர்த்தம் சொல்லியே நாம் வளர்க்கப்பட்டு வருகிறோம்.. ஆனால், இத்தகைய உறவையும் கொச்சைப்படுத்தும் சில காம வெறியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.. அந்த வகையில், அண்ணிகளுடன் கொழுந்தன்களுக்கு தகாத உறவு ஏற்பட்டு, அதனால் குடும்பம் சிதைந்த பல சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.. அதிலும் இந்த வருடம் மட்டும் இது சம்பந்தமாக 8 கொலைகள் நடந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா!

சிவகங்கை மாவட்டம் நன்னியாவூரைச் சேர்ந்தவர் அந்த பெண் கவுசல்யா.. 19 வயதாகிறது.. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாகவயல் என்ற கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜுக்கு கவுசல்யாவை அவரது வீட்டில் கல்யாணம் செய்து தந்தனர்.

பாக்யராஜுக்கோ வயசு 32 ஆகிறது.. கடந்த ஜூலை மாதம்தான் கல்யாணம் நடந்துள்ளது.. பல கனவுகளுடன் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தார் கவுசல்யா. ஆனால், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கவுசல்யா வீட்டில் சடலமாக கிடந்தார்.. அன்றைய தினம் வீட்டில் யாருமே இல்லை.. பாக்கியராஜும் வெளியூருக்கு சென்றுவிட்டார்.. போலீசாருக்கு விஷயம் தெரிந்து கவுசல்யாவின் சடலத்தை மீட்க வந்தனர்.. அப்போது கவுசல்யாவின் கை, காலெல்லாம் ரத்தம் வழிந்து கிடந்தது.. அந்த ரத்தம் வீட்டின் சுவற்றிலும் தெறித்து விழுந்திருந்தது.

 மன உளைச்சல்

மன உளைச்சல்

கணவனிடம் இதை பற்றி கேட்டதற்கு, கல்யாணத்துக்கு முன்பே உறவு இருந்தது,அதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட முடியாது என்று அசால்ட்டாக சொன்னார். கடுமையான மனஉளைச்சலுக்குள்ளான கவுசல்யா, தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.. அதனால் கத்தியால் கைகளை அறுத்து கொண்டார்.. ரத்தம் கொட்டியதே தவிர, உயிர் போகவில்லை. அதனால் ஃபேனில் தூக்கு போட்டுக் கொண்டு தொங்கிவிட்டார்.

அண்ணி

அண்ணி

இதேபோல, ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் பால்தா என்ற ஒரு பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் பிரதான் சிங்.. இவரது தம்பி மகேந்திரன் சிங்.. இவர்தான் பிரதான்சிங் மனைவியை அதாவது அண்ணியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.. இவர் மட்டுமல்லாமல், இவர்களது அப்பா பரத் சிங்கும் பாலியல் கொடுமை தந்து வந்திருக்கிறார்.

பலாத்காரம்

பலாத்காரம்

ஒரு மாசத்தில் மட்டும் மருமகளை 4 முறை மாமனார் பலாத்காரம் செய்தாராம்.. மச்சினரோ அண்ணி என்றும்கூட பாராமல், பலமுறை தாக்கி உள்ளார்.. வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள். இவ்வளவுக்கும் காரணம், கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து, அந்த பெண் இன்னும் கர்ப்பமாகவில்லையாம்.. தாய்மை அடையாததை காரணம் காட்டியே இந்த கொடுமை நடந்து வந்துள்ளது. இறுதியில் அந்த அப்பாவி பெண் போலீசுக்கு வந்து புகார் தரவும் விசாரணை நடந்து வருகிறது.

 அண்ணி மீனா

அண்ணி மீனா

இதைவிட ஒரு கொடுமை நெல்லையில் நடந்துள்ளது.. குறிச்சி பகுதியை சேர்ந்த மீனா.. 35 வயதாகிறது.. கல்யாணம் ஆகி விவாகரத்து பெற்றவர்... 9 வயதில் மகன் உள்ளார். மீனாவுக்கு நெல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் ரெட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். .. ஒருநாள், மீனா குளிக்கும் போது, மச்சினன் கிஷோர் அதை வீடியோ எடுத்துவிட்டார்... 10 லட்ச ரூபாய் தராவிட்டால் வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுக்கவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் புகார் அளித்தார் மீனா.

கடலூர்

கடலூர்

அதேபோல, கடலூரில் ஒரு சம்பவம் நடந்தது.. ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள்.. 38 வயதாகிறது.. போலீசில் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வருகிறார்... பண்ருட்டியை சேர்ந்த ராஜேஸ்வரியுடன் இவருக்கு சில மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் ஆனது.. ராஜேஸ்வரி வயது 30! கணவன் அருளுக்கு, அண்ணி வெண்ணிலாவுடன் உறவு இருந்துள்ளது.. பலமுறை ராஜேஸ்வரியிடம், 'நாங்கள் சந்தோஷமாக இருக்க நீதான் தடையாய் இருக்கிறே.. என் அண்ணி எவ்ளோ அழகா இருக்காங்க பாரு.. முதல்ல வீட்டை விட்டு வெளியே போ, அல்லது செத்து போய்ட்டால், எங்களுக்கே எல்லா சொத்தும் கிடைக்கும்" என்று சொல்லி கொண்டே இருப்பாராம். கடைசியில் ராஜேஸ்வரி தற்கொலையே செய்து கொண்டார்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இதுபோன்ற பல சம்பவங்கள் அண்ணி - கொழுந்தன் இடையே நடந்துள்ளன.. அண்ணியை பலாத்காரம் செய்த சம்பவமும் நடந்துள்ளது.. சில சமயங்களில், அண்ணியே கொழுந்தனுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு, அப்பாவி கணவனை அல்லது மனைவியை கொலை செய்ததும் நடந்துள்ளதை ஜீரணிக்கவே முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+